Madharasi : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் நெக்ஸ்ட் அப்டேட் இதுதானா?

Madharasi Movie Update : தமிழ் சினிமாவில் அமரன் படத்தை தொடர்ந்து உச்சத்திற்கு சென்றவர் சிவகார்த்திகேயன். இந்த படமானது எதிர்பாராத வரவேற்பை பெற்று ஹிட்டானது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், மதராஸி படத்தில் இணைந்தார். இப்படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்திய நிலையில், இதை தொடர்ந்து அடுத்த அப்டேட்டாக இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது.

Madharasi : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் நெக்ஸ்ட் அப்டேட் இதுதானா?

சிவகார்த்திகேயனின் மதராஸி படம்

Published: 

20 Apr 2025 18:48 PM

கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து, மாஸ் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ. ஆர். முருகதாஸ் (A. R. Murugadoss). இவரின் இயக்கத்தில் இறுதியாக பாலிவுட்டில் சிக்கந்தர் (Sikandar) படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் இயக்கி வந்த படம் மதராஸி (Madharasi). இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன்  (Sivakarthikeyan) நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2023ம் ஆண்டு இறுதியிலே அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. மேலும் இந்த படமானது தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இன்னும் சுமார் 12ல் இருந்து 13 நாட்கள் படப்பிடிப்புகள் மட்டும் மிச்சம் உள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் சமீபத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகியிருந்தது. இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த அப்டேட்டை தொடர்ந்து விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் அனிருத்தின் இசையமைப்பில், காதல் பாடல் முதலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி பதிவு :

நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக, கன்னட நாயகி ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நடிகர் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் துப்பாக்கி படத்தில் நடித்த வித்யுத் ஜம்வால் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் கதைக்களமானது மிகவும் வித்தியாசமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஸ்டோரி கஜினி மற்றும் துப்பாக்கி என இரண்டு திரைப்படமும் கலந்த கலவையாக இருக்கும் என இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சமீபத்தில் நேர்காணலில் அவர் கூறியிருந்தார்.

இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. பான் இந்திய திரைப்படமாக இந்த படமானது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. மேலும் கடந்த 2024ம் ஆண்டு நடிகர் விஜய்யின் கோட் படம் வெளியான அதே தினத்தில் இந்த 2025ம் ஆண்டில் மதராஸி படமானது வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.