Santhanam : மீண்டும் இணைந்த சிம்பு – சந்தானம் காம்போ.. STR 49 படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

Silambasaran STR 49 New Update : நடிகர் சிலம்பரசனின் முன்னணி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் STR 49. இயக்குநர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து, இந்த படத்தின் ஆக்ஷ்ன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தனமும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Santhanam : மீண்டும் இணைந்த சிம்பு - சந்தானம் காம்போ.. STR 49 படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

சிம்பு - சந்தானம்

Published: 

30 Apr 2025 18:14 PM

தென்னிந்தியாவில் நடிகர் சிலம்பரசனை (Silambarasan) தெரியாத ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்குத் தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர்  (T. Rajendar) பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் என்பதால் சிறுவயதிலே சிம்புவை திரையில் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து பல வருடங்களாகப் படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான பத்து தல (Pathu Thala) படத்தை தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam) தக் லைஃப்  (Thug Life) படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இதை தொடர்ந்து அடுத்தடுத்த 3 படங்களை தன் வசம் வைத்துள்ளார்.

அதில் விரைவில் உருவாகவுள்ள படம் STR 49. இந்த படத்தை ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கயாடு லோஹர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் நடிகர் சந்தானம் இந்த திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது பல் ஆண்டுகளுக்குப் பின் சிலம்பரசனுடன், சந்தானம்  (Santhanam) STR 49 படத்தில் நடிக்கவுள்ளதைப் படக்குழு உறுதி செய்துள்ளது.

டான் பிக்ச்சர்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக்கவுள்ள இந்த படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இவர் பராசக்தி, இதயம் முரளி, இட்லி கடை போன்ற படங்களைத் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து சிம்புவின் STR 49 படத்தையும் தயாரித்து வருகிறார்.

சிலம்பரசனின் இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இவர் இந்த படத்திற்காக இதுவரை சுமார் 3 பாடல்களை இசையமைத்து முடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் சூர்யா45, பிஆர்04 மற்றும் பென்ஸ் போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலம்பரசனுடம் இந்த படத்தில் நடிகை கயாடு லோஹர் மற்றும் சந்தானம் இணைந்து நடிக்கவுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பின் சந்தானம் மற்றும் சிலம்பரசனின் கூட்டணியில் உருவாகும் படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது ஆக்ஷ்ன் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஜூன் மாதத்தில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.