சினிமாவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரியோ ராஜ் – வெளியானது அறிவிப்பு
Rio Raj New Production House: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் ரியோ ராஜ். இவர் தற்போது சினிமாவில் புதிதாக தயாரிப்பாளர் என்ற அவதாரத்தை எடுத்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

ரிவர் ரூட் ஸ்டுடியோஸ்
தமிழ் சின்னத்திரையில் வெளியான கனா காணும் காலங்கள் கல்லூரி காலம் என்ற சீரியலின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் ரியோ ராஜ். அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் சரவணன் மீனாட்சி என்ற பிரபல தொடரில் நாயகனாக நடித்தார். இந்த சீரியலுக்கு பிறகு ரியோ ராஜிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் அதிகரித்தது. பிறகு வெள்ளித்திரையில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் ரியோ ராஜ். இவர் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அதனைத் தொடர்ந்து இவர் தேர்வு செய்யும் கதைகளின் காரணமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கினார். இதன் காரணமாக தற்போது நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஆண் பாவம் பொல்லாதது. இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரியோ ராஜ் தற்போது ராம் இன் லீலா என்ற படத்தில் தற்போது நாயகனாக நடித்து வருகிறார்.
சினிமாவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரியோ ராஜ்:
தொடர்ந்து சினிமாவில் நாயகனாக வலம் வந்த ரியோ ராஜ் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி இவர் தற்போது ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது உடன் அவர் முதலாவதாக தயாரிக்க உள்ள படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்தும் அறிவித்துள்ளனர். நடிகர் ரியோவின் இந்த புதிய அவதாரத்திற்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read… STR 51 படத்தில் சிம்பு உடன் இணைந்து நடிகர் சந்தானம் – வைரலாகும் தகவல்
நடிகர் ரியோ ராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
On this March 2nd, we are marching towards our vision, dreams and hopes! @rrs_team
River Route Studios production house!
Started with friendship, built on passion, and driven by the love for cinema.🔗https://t.co/TswXbFez3q pic.twitter.com/pbsc8bO8rt
— Rio raj (@rio_raj) March 2, 2026
Also Read… விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்