பாக்கெட் நாவல் படத்தில் நான் வில்லன் இல்லை… பிரபல கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி சுவாரஸ்ய பேச்சு!

Kannada Actor Raj B Shetty Recent Interview: கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ரிஷப் பி ஷெட்டி. இவர் தற்போது பாக்கெட் நாவல் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகிறார். இந்த நிலையில் அவர் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாக்கெட் நாவல் படத்தில் நான் வில்லன் இல்லை... பிரபல கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி சுவாரஸ்ய பேச்சு!

நடிகர் ராஜ் பி. ஷெட்டி

Published: 

23 Feb 2026 15:13 PM

 IST

கன்னட சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஒண்டு மொட்டேய கதே என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் ராஜ் பி. ஷெட்டி. இந்தப் படத்தில் நாயகனாக மட்டும் இன்றி இயக்குநராகவும் கன்னட சினிமாவில் அறிமுகம் ஆனார் ராஜ் பி. ஷெட்டி. ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து கன்னட சினிமாவில் நாயகனாகவு, இயக்குநராகவும் வலம் வருகிறார் ராஜ் பி. ஷெட்டி. இவர் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை இயக்கி நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார். கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் ராஜ் பி ஷெட்டி அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவிலும் அவர் நடிகராக அறிமுகம் ஆகி உள்ளார். அதன்படி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் பாக்கெட் நாவல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகிறார் ராஜ் பி ஷெட்டி. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ராஜ் பி ஷெட்டி பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாக்கெட் நாவல் படத்தில் நான் வில்லன் இல்லை:

ஒரு படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் ஆகும் போதெல்லாம், மக்கள் என்னை வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன் என்று நினைத்துக்கொள்கிறார்கள். இங்கே அப்படி இல்லை. பாக்கெட் நாவலில் நான் வில்லன் அல்ல, நான் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்தில் மிகவும் உற்சாகப்படுத்துவது என்னவென்றால், நான் பல ஆண்டுகளாகப் போற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் கிஷோர் போன்ற நடிகர்களுடன் இருப்பதும், அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பார்ப்பதும் எனக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைப்பார் என்பதை நான் திடீரென்று அறிந்தேன். நான் நடிக்கும் ஒரு படத்தில், நான் நடிக்கும் ஒரு காட்சியில், இளையராஜா இசையமைப்பார். அது எனக்கு நம்பமுடியாத மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் ராஜ் பி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

Also Read… கமல் ஹாசன் – ரஜினிகாந்த் படத்தை நான் இயக்காததற்கு இதுதான் காரணம்… வைரலாகும் லோகேஷ் கனகராஜ்

இணையத்தில் வைரலாகும் ராஜ் பி ஷெட்டியின் பேச்சு:

Also Read… Thaai Kizhavi Movie: ராதிகா சரத்குமாரின் ‘தாய் கிழவி’ பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? – வெளியான அப்டேட் இதோ!!

ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!