Benz : லோகேஷ் கனகராஜ் – ராகவா லாரன்ஸின் பென்ஸ் -பூஜையுடன் ஷூட்டிங் ஸ்டார்ட்!
Raghava Lawrence Benz Movie Shooting : தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டுமல்லாமல் தொடர்ந்து, தயாரிப்பாளராகவும் படங்களை உருவாக்கிவருபவர் லோகேஷ் கனகராஜ். இவரின் எழுத்திலும், தயாரிப்பிலும் உருவாகவுள்ள படம் பென்ஸ். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இணைந்துள்ள நடிகர்கள் விவரம் பற்றிப் பார்க்கலாம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) எழுத்திலும், தயாரிப்பிலும் உருவாகிவரும் படம் பென்ஸ் (Benz) . இந்த படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (Bakkiyaraj Kannan) இயக்கவுள்ளார். இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் திரைக்கதையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் முன்னணி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டிலே வெளியிடப்பட்டிருந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் இன்று 2025, மே 12ம் தேதி முதல் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கவுள்ளாராம், இவர் ஏற்கனவே ரெமோ (Remo) மற்றும் சுல்தான் போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் ஆர். மாதவன் (R. Madhavan) நடிக்கவுள்ளாராம்.
அடிவரை தொடர்ந்து, இதில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட கதைக்களத்துடன் உருவாகி வரும் நிலையில், 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
பென்ஸ் திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை புகைப்படங்கள் :
Official – #Benz kickstarted with a Pooja today 🔥
Starring RaghavaLawrence, Madhavan & NivinPauly 🌟 pic.twitter.com/P49u9wGbjy— AmuthaBharathi (@CinemaWithAB) May 12, 2025
ராகவா லாரன்ஸின் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளாராம். இந்நிலையில், ராகவா லாரன்சுடன் ஆர்.மாதவன், நிவின் பாலி மற்றும் பிரியங்கா மோகன் என போன்ற பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே காஞ்சனா 4 படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையை அவரே , எழுதி இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் முன்னணி நாயகனாக நடித்துவரும் நிலையில், அவருடன் நடிகைகள் பூஜா ஹெக்டே, மற்றும் நோரா ஃபதேஹி இணைந்து நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஹாரர் கதைக்களத்துடன் உருவாகிவரும் இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்துதான் நடிகர் ராகவா லாரன்ஸ் பென்ஸ் படத்தில் இணைந்துள்ளார். இந்த படமானது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் LCU, லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொகுப்பில் ஒரு பாகமாக இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் LCUவில் கைதி, விக்ரம், லியோ போன்ற திரைப்படங்கள் இணைத்துள்ளது. அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸின் இந்த பென்ஸ் படமும் லோகேஷ் சினிமாடிக் யுனிவெர்சில் இணையவுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்து வருகிறார். அவர் இந்த படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.