100வது நாளில் ‘டிராகன்’ படம்.. அதிரடி போஸ்டரை வெளியிட்ட பிரதீப் ரங்கநாதன்!

Dragon Movie Successfully Reaches 100 Days : சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக இருந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டிராகன். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான இப்படம் 100 நாட்களைக் கடந்துள்ளது.

100வது நாளில் டிராகன் படம்.. அதிரடி போஸ்டரை வெளியிட்ட பிரதீப் ரங்கநாதன்!

டிராகன் திரைப்படம்

Updated On: 

01 Jun 2025 17:30 PM

 IST

கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). ஆரம்பத்தில் சினிமாவில் நடிகர் ரவி மோகனின் கோமாளி (Comali) என்ற படத்தின் மூலம், இயக்குநராக நுழைந்தார். அதைத் தொடர்ந்து, தனது இயக்கத்தில் லவ் டுடே (Love today) என்ற படத்தில் ஹீரோவாக நடித்து மிகவும் பிரபலமானார். தனது இயக்கத்திலே நடிகனாகவும் அறிமுகமான இவர், முதல் படத்தின் மூலமாகவே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் (Aswath Marimuthu) இயக்கத்தில் , டிராகன் (Dragon) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025 , பிப்ரவரி மாதத்தின் இறுதியில் வெளியானது.

லவ் டுடே திரைப்படம் போல இந்த டிராகன் படமும் ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது. இந்த படமானது வெளியாகி சுமார் ரூ. 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனையைப் படைத்தது . கடந்த 2025,பிப்ரவரி 21ம் தேதியில் இந்தப் படமானது வெளியான நிலையில், இன்று 2025, ஜூன் 1ம் தேதியோடு 100வது நாளை தொட்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

டிராகன் பட வெற்றி :

இந்த பதத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் இரு ஹீரோயின்கள் இணைந்து நடித்திருந்தனர். நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் நடிகை கயாடு லோஹர் என 2 நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படமானது எதிர்பார்த்ததைவிடவும் மக்கள் மத்தியில் பெரும் வெற்றிபெற்று சுமார் ரூ.150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

பிரதீப் ரங்கநாதனின் புதிய படங்கள் :

நடிகர் பிரதீப் ரங்கநாதன், டிராகன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் , லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்துவந்தார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் டிராகன் படத்துடன் நடைபெற்றுவந்தது. மேலும் இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஷூட்டிங்கும் கடந்த 2025, மார்ச் மாதத்தோடு நிறைவடைந்தது. மேலும் இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 18ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டியூட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ இணைந்து நடித்து வருகிறார். இந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, சாய் அப்யங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படமும் இந்த 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையோடு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.