சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாக பாராட்டிய நானி!

Actor Nani: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் நானி தமிழ் படங்களை அவ்வப்போது பார்த்து தனது விமர்சனத்தையும் பாராட்டையும் தெரிவித்து வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் அவர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாக பாராட்டிய நானி!

நானி

Published: 

27 May 2025 16:14 PM

நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் நேச்சுரல் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் நானி (Actor Nani). இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழில் இவரது நடிப்பில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து இருதாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹிட் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த போது கடந்த 10 ஆண்டுகளில் வெளியான படங்களில் தனக்கு மிகவும் பிடித்த படமாக மெய்யழகன் உள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ் படங்களை பார்த்து அதனைப் பாராட்ட நடிகர் நானி தவறியத்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிளி படத்தைப் பார்த்துவிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு பாராட்டியுள்ளார்.

நடிகர் நானி டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அதில் அவர் கூறியதாவது, எளிமையாந்தகவு, மனதைத் தொடும் படங்கள், நிறைய நன்மைகளுடன் இருப்பதுதான் நமக்குத் தற்போது தேவையானது. டூரிஸ்ட் ஃபேமிலி படம் அதைத்தான் வழங்குகிறது. இந்த ஒரு ரத்தினப் படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் நன்றி. மிகவும் தேவையான படம் இது என்றும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்தப் பதிவிற்கு டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தப் பதிவில், உங்கள் அன்பான வார்த்தைகளால் உண்மையிலேயே பணிவுடன் இருக்கிறோம், அன்பே நடிஅக்ர் நானி டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மீதான உங்கள் அன்பால் நாங்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்தோம். படத்தை இவ்வளவு அன்புடன் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி என்று அந்தப் படதிவில் தெரிவித்து இருந்தனர்