ஜாலி டூ மீட் யூ… காமெடி, ஆக்‌ஷன், ரொமாண்டிக் பாணியில் வெளியானது வா வாத்தியார் பட ட்ரெய்லர்

Vaa Vaathiyaar Movie Trailer : நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வா வாத்தியார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஜாலி டூ மீட் யூ... காமெடி, ஆக்‌ஷன், ரொமாண்டிக் பாணியில் வெளியானது வா வாத்தியார் பட ட்ரெய்லர்

வா வாத்தியார்

Published: 

06 Dec 2025 12:25 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான படம் மெய்யழகன். ஃபீல் குட் படமாக வெளியான இந்தப் படம் தமிழ் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வா வாத்தியார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த ஜோடி இணைந்தது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஆக்‌ஷன் காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் நலன் குமாராசாமி எழுதி இயக்கி உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் வெளியான சூது கவ்வும் படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான காதலும் கடந்துபோகும் படமும் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது கார்த்தியை இயக்கி உள்ளார்.

காமெடி, ஆக்‌ஷன், ரொமாண்டிக் பாணியில் வெளியானது வா வாத்தியார் பட ட்ரெய்லர்:

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா தயாரித்து உள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் கார்த்தி மற்றும் கிருத்தி ஷெட்டி உடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், பி.எல்.தேனப்பன், வித்யா போர்கியா, நிவாஸ் அத்திடன், மதுர் மிட்டல் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மிகவும் காமெடியாக வெளியாகி உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… மெண்டல் மனதில் படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார் – வைரலாகும் போஸ்ட்

வா வாத்தியார் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தலைவர் 173 படத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லையா? இவதான் இசையமைக்கிறாரா

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..