நடிகர் நாகர்ஜுனாவுடன் இணைந்து நடித்ததே பெருமை – நடிகர் தனுஷ்

Actor Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது குபேரா படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் அந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனா உடன் இணைந்து நடித்தது குறித்தும் அவரிடம் நடிப்பு குறித்து கற்றுக்கொண்டது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகர் நாகர்ஜுனாவுடன் இணைந்து நடித்ததே பெருமை - நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ், நடிகர் நாகர்ஜுனா

Updated On: 

27 May 2025 18:03 PM

 IST

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடகர், பாடலாசிரியர் என கலக்கி வருகிறார் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ராயன். இது தனுஷின் 50-வது படம் ஆகும். இந்தப் படத்தை தனுஷே எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்க்து. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்:

நடிகர் தனுஷ் ராயன் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் முற்றிலும் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் இருந்து நடிகர் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

நாகர்ஜுனா குறித்து பேசிய தனுஷ்:

நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக நாகர்ஜுனா உடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ளார். அதில் சின்ன வயதில் இருந்து பார்த்து பிரம்மித்த நடிகர் நாகர்ஜுனா உடன் இணைந்து பணியாற்றியது மிகவும் பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் தனுஷ் தமிழில் நாகர்ஜுனா நடித்த ரட்சகன் படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளர்.

மேலும் நடிகர் நாகார்ஜுனா உடன் படப்பிடிப்பில் இருந்த போது தான் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டதாகவும். அதனை தனது வாழ்க்கையிலும் வேலையிலும் செய்வேன் என்றும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இட்லி கடை படத்தை இயக்கி நடிக்கும் தனுஷ்:

குபேர படம் மட்டும் இன்றி நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை தமிழில் தானே இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படம் ஏப்ரல் மாதமே திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஆனது. இந்தப் படம் தற்போது அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

Follow Us
Related Stories
ஹேப்பி ராஜ் முதல் சாத்தான் வரை… நாளை மார்ச் 27-ம் தேதி தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
ஜெயராம் – பிரித்வி பாண்டியராஜனின் கதாப்பாத்திர போஸ்டர்களை வெளியிட்டது கர படக்குழு
சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் நடைபெறாதா? இணையத்தில் வைரலாகும் தகவல்
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..