‘அடங்காத அசுரன்தான்’.. மேடையில் பாடி அசத்திய தனுஷ்- ஏ.ஆர். ரஹ்மான்.. வைரலாகும் வீடியோ!
Dhanush And AR Rahman Concert : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், பாடகர் எனப் பல திறமையைக் கொண்டிருப்பவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தனுஷ். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் ராயன் படத்தில் வெளியான பாடலை இணைந்து பாடி அசத்தியுள்ளார். அது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷின் (Dhanush) இயக்கத்திலும் , நடிப்பிலும் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் இட்லி கடை (Idly Kadai). இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இந்தியில் தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishq Mein) என்ற படத்தில் பிசியாக இருந்து வருகிறார். இதைத் தொடர்ந்து தெலுங்கிலும் இவரின் நடிப்பில் குபேரா (Kuberaa) என்ற படமானது இறுதிக்கட்டத்தில் இருந்து வருகிறது. மேலும் நடிகர் தனுஷின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ராயன் (Raayan). இந்த படத்தை நடிகர் தனுஷே இயக்கி அதில் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர்கள் காளிதாஸ், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் (AR. Rahman) இசையமைத்திருந்தார். இந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் அருமையாக ஹிட்டாகியிருந்தது.
அதிலும் “அடங்காத அசுரன்தான்” (Adangaatha Asuran) என்ற பாடல் மக்களிடையே மிகவும் பேமஸானது. இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் (Mumbai) நடந்த இசை நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். இசை நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் அனைவரின் முன்னிலையிலும் பாடிய வீடியோ வைரலாகி வருகிறது. ராயன் படத்திலும் உண்மையாகவே இவர்கள் இருவரும் இணைந்துதான் இந்த பாடலை பாடியிருந்தனர். இந்நிலையில் இசை நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்தும் பாடும் பாடலின் வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் தனுஷ் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் வீடியோ :
#ARRahman and #Dhanush singing “Adangatha Asuran” Song in yesterday’s mumbai concert 😍🔥pic.twitter.com/nXSeFAjDDy
— AmuthaBharathi (@CinemaWithAB) May 4, 2025
இந்த வீடியோவில் இவர்கள் இருவரும் இணைந்து பாடும் காட்சியானது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான இந்த படமும் சரி, பாடத்தின் பாடல்களும் சரி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் புதிய தமிழ்ப் படங்கள் ;
நடிகர் தனுஷ் இட்லி கடை படத்தை தொடர்ந்து, தமிழில் மட்டுமே 3 படங்களில் கமிட்டாகியுள்ளார். அமரன் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் டி55 என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் வரும் 2025 செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் டி56 என்ற படத்திலும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படமானது வரலாற்று கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை அடுத்ததாக போர்த்தொழில் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை டி56 திரைப்படத்தைத் தயாரிக்கும், அதே நிறுவனம் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்றார் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகவும் என்று கூறப்படுகிறது.