மீசையை முறுக்கு 2 படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன ஆதி – வைரலாகும் வீடியோ
Meesaya Murukku 2 Movie Update: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது கான்செட்டில் அடுத்ததாக உருவாக உள்ள மீசையை முருக்கு படம் குறித்து முக்கிய அப்டேட்டை கூறி உள்ளார்.

ஆதி
தமிழ் ரசிகர்களிடையே ஆல்பம் பாடல்களை எழுதி இசையமைத்ததன் மூலம் பிரபலம் ஆனவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இவர் தொடர்ந்து தனது ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலம் ஆகி இருந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கி இருந்த நிலையில் நடிகர் விஷால் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இந்தப் படத்தில் வெளியான யார் என்ன சொன்னாலும் என்ற குடும்ப பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது வரை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுகம் ஆன முதல் படமே ரெசிகர்கலீடிஅயே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இசையமைப்பாளராக வலம் வந்த ஆதி தற்போது நாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் ஆதி அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மீசையை முறுக்கு 2 படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன ஆதி:
தொடர்ந்து இசையமைப்பாளராக வலம் வந்த ஆதி கடந்த் 2017-ம் ஆண்டு வெளியான மீசையை முறுக்கு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பலப் படங்களில் நடித்த நடிகர் ஆதி தற்போது மீசையை முறுக்கு படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.
அதன்படி சமீபத்தில் மியூசிக் கான்செட்டில் பங்கேற்றப்போது ஆதி பேசியதாவது, மீசைய முறுக்கு 1 ஆதி மற்றும் ஜீவா என்ற இரு நண்பர்களின் கதையைச் சொன்னது.
மீசைய முறுக்கு 2 இரண்டு நண்பர்களை அடிப்படையாகக் கொண்ட உண்மைக் கதை. எனது சகோதரனாக ஹர்ஷத் கான் நடிக்கிறார் என்றும் அப்போது பேசியுள்ளார்.
Also Read… யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது விஜயின் தளபதி கச்சேரி பாடலின் லிரிக்கள் வீடியோ
இணையத்தில் கவனம் பெறும் ஆதி பேசிய பேச்சு:
#Adhi 🎤
– #MeesayaMurukku 1 told the story of two friends, Adhi and #Jeeva 🤝
– #MeesayaMurukku2 is also a true story based on two friends 🎥 #HarshathKhan plays my brother’s role 🫂#HiphopTamizhapic.twitter.com/9q9u63KWqH— Movie Tamil (@_MovieTamil) January 18, 2026
Also Read… புது படத்தில் இணைந்த கவின் – சாண்டி.. ரசிகர்களிடையே வைரலாகும் அறிவிப்பு வீடியோ!