With love: அபிஷன் ஜீவிந்தின் வெற்றி.. 10 நாட்களில் ‘வித் லவ்’ பட வசூல் இத்தனை கோடியா? – வெளியான அறிவிப்பு!

With Love Movie 10 Days Collection: அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் கடந்த 2026 பிப்ரவரி 6ம் தேதியில் வெளியான படம் வித் லவ். இப்படம் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், 10 நாட்களை உலகமெங்கும் இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

With love: அபிஷன் ஜீவிந்தின் வெற்றி.. 10 நாட்களில் வித் லவ் பட வசூல் இத்தனை கோடியா? - வெளியான அறிவிப்பு!

அபிஷன் ஜீவிந்தின் வித் லவ்

Updated On: 

16 Feb 2026 13:46 PM

 IST

கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth). இவர் அதற்கு முன் சில படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அந்த விதத்தில் இயக்குநராக நுழைந்த முதல் படமே இவருக்கு தென்னிந்திய மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. அந்த விதத்தில் இவர் கதாநாயகனாகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த முதல் படம்தான் வித் லவ் (With Love). இந்த படத்தில் அபிஷன் ஜீவிந்திருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) நடித்துள்ளார். இவருக்கும் கதாநாயகியாக தமிழில் முதல் படமாகும். இதற்கு முன் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். வித் லவ் படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை தயாரித்துள்ளார். ஃபீல் குட் காதல் கதைக்களத்தில் வெளியான இப்படம் 2026 பிப்ரவரி 6ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது.

திரையரங்குகளில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், 10 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த 10 நாளில் உலகமெங்கும் மொத்தமாக இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வித் லவ் படமானது சுமார் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: விமானநிலையத்தில் ரசிகர்கள் செய்த செயல்.. உறைந்து நின்ற ரஜினிகாந்த் – வீடியோ இதோ!

வித் லவ் திரைப்படத்தின் 10 நாட்கள் வசூல் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

வித் லவ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது :

இந்த் வித் லவ் திரைப்படமானது பள்ளிப்பருவ முதல் காதல் மற்றும் எமோஷனல் ஃபீல் குட் கதைக்களத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வராவின் ஜோடி அருமையாக இருந்தது என்றே கூறலாம். இப்படத்தில் தல அஜித் குமாரின் பட பாடலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது மக்களிடையே மிகவும் வரவேற்கப்பட்டிருந்தது. மேலும் இசையமைப்பாளர் ஷேன் ரோல்டனின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது ரிலீஸான முதல் நாளிலே பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் திரையிடப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தில் சசிகுமார் ஒரு சிறிய கேமியோ வேடத்திலும் நடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க: டாக்சிக் – துரந்தர் 2 படத்துடன் போட்டியிடும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? – வைரலாகும் தகவல்!

அந்த வகையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் இப்படம் வெளியாகி 10 நாட்களை கடந்த நிலையில், ஓடிடியில் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வரும் 2026 ஆண்டு மார்ச் மாதத்தில் 4 அல்லது 6ம் தேதிக்குள் வெளியாகிவிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது குறித்த அறிவிப்புகளும் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
SK26: சிவகார்த்திகேயனின் 26வது படத்தை இயக்கும் தாய் கிழவி பட இயக்குநர்- டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!
திருமண தேதியை முடிவு செய்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி… வைரலாகும் தகவல்
வழித்துணையே.. திருமண புகைப்படங்களை பகிர்ந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை!
பைசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வைரலாகும் துருவ் விக்ரமின் அடுத்த படத்தின் அப்டேட்!
Malavika Mohanan: ‘தி ராஜா சாப் பட ஆக்ஷன் காட்சியில் டூப்-பை பயன்படுத்தினேனா?’- மாளவிகா மோகன் ஆதாரத்துடன் வெளியிட்ட பதிவு!
‘எந்தக்கட்சியிலும் நான் இல்லை.. பொதுவெளியில் விவாதம் வேண்டாம்’ – வழக்கறிஞர் மூலம் நடிகை த்ரிஷா அறிக்கை
ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?