கூலி வரவேற்பு குறைவு.. ஆமிர்கான் – லோகேஷ் கனகராஜ் படம் கைவிடப்பட்டதா?
Aamir Khan and Lokesh Kanagaraj Collaboration : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் இறுதியாக கூலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அடுத்து கைதி 2 படத்தை இயக்கவுள்ள நிலையில், தொடர்ந்து ஆமிர்கானுடனும் இந்தியில் படத்தை இயக்கவுள்ளார் என கூறப்பட்டது. தற்போது அந்த படமானது கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆமிர்கான்
கோலிவுட் சினிமாவில் சில படங்களை இயக்கியிருந்தாலும், ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) வரை, பல்வேறு பிரபலங்களை வைத்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். சினிமாவில் 6 திரைப்படங்களில் கிட்டத்தட்ட 22 நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் கூலி படமானது இறுதியாக வெளியானது. அப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் நாகார்ஜுனா (Nagarjuna), சவுபின் ஷாஹிர் மற்றும் ஆமிர்கான் (Aamir Khan) என பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இதில் நடிகர் ஆமிர் கான், மாறுபட்ட ரோலில் இப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தை அடுத்ததாக லோகேஷ் கனகராஜ், ஆமிர்கானுடன் இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதை ஆமிர்கானும் பல மேடைகளில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ அவர்தான் – கல்யாணி பிரியதர்ஷன் சொன்னது யார் தெரியுமா?
இந்நிலையில், தற்போது இந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆமிர்கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருப்பதாக கூறப்பட்ட சூப்பர் ஹீரோ படம் கைவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமிர்கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் படம் கைவிடப்பட்டதா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் கூலி திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியீட்டிற்கு முன்னே பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், ரிலீசிற்கு பின் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் இப்படம் லோகேஷ் கனகராஜின் படம் மாதிரி இல்லை என்றும் ரசிகர்கள் கூறிவந்தனர். மேலும் இப்படத்தின் இறுதியில், ஆமிர்கானின் கேமியோ ரோல் காட்சிகள் இருந்தது.
இதையும் படிங்க : என் குடும்பமே 3 வேலை சாப்பிட நீங்கதான் காரணம் – நடிகர் விஷால்
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ், இந்தியில் ஆமிர்கானின் படத்தின் மூலம் அறிமுகமாகவிருந்த நிலையில், தற்போது இவர்கள் கூட்டணி படமானது கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து, லோகேஷ் கனகராஜ் மற்றும் அமீர்கான் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூலி படம் குறித்து சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு
Edraa Headphones-ah🔥 #Coolie OST Jukebox is out now!
▶️ https://t.co/U2xxPqusQ6@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica @monishablessyb @anbariv @girishganges @philoedit… pic.twitter.com/1E4jRDqyip
— Sun Pictures (@sunpictures) September 10, 2025
ஹீரோவாக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ளதாம். இந்த படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக, கூலி படத்தில் நடித்த ரட்சிதா ராம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.