Coolie : விக்ரமில் ரோலக்ஸ் போல.. கூலியில் வரவேற்பைப் பெற்றதா ஆமிர்கானின் கதாபாத்திரம் ?

Aamir Khans Dahaa Role In Coolie Movie : தமிழ் சினிமாவில் 2025ம் ஆண்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியான படம் கூலி. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதா என்பதைக் குறித்துப் பார்க்கலாம்.

Coolie : விக்ரமில் ரோலக்ஸ் போல.. கூலியில் வரவேற்பைப் பெற்றதா ஆமிர்கானின் கதாபாத்திரம் ?

நடிகர் ஆமிர்கான்

Updated On: 

14 Aug 2025 18:25 PM

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஆமிர் கான் (Aamir Khan). இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி எதிர்பாராத அளவிற்கு வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இவர் நடித்திருந்த படம்தான் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் வெளியானது இந்த படம். இப்படத்தைத் தமிழ் சிறந்த இயக்குநரான லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்தார். இந்த படமானது இன்று 2025 , ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் பான் இந்திய நடிகர்களான நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், உபேந்திர ராவ், ஸ்ருதி ஹாசன் (Shruthi Haasan) உட்படப் பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். இதில் குறிப்பாக நடிகர் ஆமிர் கான், “தாஹா” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவரின் கதாபாத்திரம் கூலியில் கேமியோ தோற்றத்தில் ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பின் அவரே பாலிவுட் நேர்காணல் ஒன்றில் கூலி படத்தில் நடிப்பதாகக் கூறிவிட்டார். இந்நிலையில், இவரின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றுள்ளதும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

இதையும் படிங்க : கூலியில் நடந்த சர்ப்ரைஸ்.. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான் இதுதான்!

கூலியில் ஆமிர் கானின் தாஹா கதாபாத்திரம் :

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில், இந்த கூலி படத்திலும் ஆமிர் கான் நடித்திருந்த கதாபாத்திரத்தின் மேலும் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இப்படத்தில் தாஹா என்ற கதாபாத்திரத்தில் ஆமிர் கான் நடித்திருந்தார்.

இதையும் படிங்க : திரையரங்குகளில் வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம்… FDFS பார்க்க வந்த பிரபலங்கள்!

இப்படத்தில் விக்ரம் பட க்ளைமேக்ஸ் போல, கூலியிலும் ஆமிர் கானின் கதாபாத்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் கூலி கதைக்குள் வலுக்கட்டாயமாகப் பொருந்துவது போல் இருந்ததாம். மேலும் தாஹா என்ற கதாபாத்திரத்தில் பெயர் கூட ஆமிர் கானின் கதாபாத்திரத்திற்கு ஒத்துப்போகவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக மொத்தம் விக்ரம் படத்தைப் போல , இப்படத்தில் ஆமிர் கானின் கதாபாத்திரத்திற்கு மேல் இருந்த எதிர்பார்ப்புகள் வீணாகிவிட்டதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

கூலி படக்குழு வெளியிட்ட திரையரங்கில் ரசிகர்கள் வரவேற்பைக் கொடுக்கும் பதிவு :

இந்த கூலி படமானது முதல் நாளில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மேலும் இந்த வாரத்தில் தொடர் விடுமுறை காரணமாக இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் உலகளாவிய வசூலில் இப்படமானது முதல் நாளிலே சுமார் ரூ 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.