Aamir Khan: கூலி படத்தில் நடிச்சது பெரிய மிஸ்டேக்.. ஆமிர்கானின் பேச்சால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் வருத்தம்!
Aamir Khan Regrets Coolie Movie: : தமிழ் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம்தான் கூலி. இதில் ஆமிர்கானும் கேமியோ வேடத்தில் நடித்திருந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், கூலி படத்தில் நடித்தது மிக பெரிய தவறு என பேசியுள்ளார். இது ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆமிர்கான்
தமிழ் சினிமாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) அதிரடி நடிப்பிலும் வெளியான திரைப்படம் கூலி (Coolie). இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார். இந்த கூலி படத்தில் ரஜினிகாந்த் அதிரடி ஆக்ஷ்ன் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இதில் பான் இந்திய நடிகர்கள் நாகார்ஜுனா (Nagarjuna), ஆமிர்கான் (Aamir Khan), உபேந்திரா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் ரட்சிதா ராம் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இதில் பாலிவுட் நடிகர் ஆமிர்கான், “தாஹா” (Dhahaa) என்ற வேடத்தில் கூலி படத்தின் இறுதி கடைசியில் நடித்திருந்தார்.
இந்நிலையில் , இவர் சமீபத்தில் தனியார் பத்திரிக்கைப் பேட்டி ஒன்றில், “கூலி படத்தில் நடித்தது மிக பெரிய தவறு என்றும், இனிமே அடுத்தடுத்த படங்களில் அதிகம் கவனமாக இருப்பேன்” என்றும் பேசியுள்ளார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் ஆமிர்கான் பேசிய விஷயம் குறித்து முழுமையாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : அர்ஜுன் தாஸின் நடிப்பில் உருவாகும் ‘கும்கி 2’.. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
கூலி படத்தில் நடித்தது குறித்து ஆமிர்கான்
அந்த பத்திரிக்கை பேட்டியில் ஆமிர்கான், “நான் ரஜினி சாருக்காக தான், கூலியில் அந்த ரோல் பண்ணேன். ஆனால், அந்த படத்துல என் கேரக்டர் என்ன பண்ணுச்சுனு சத்தியமா எனக்கே தெரியவில்லை. அதில் சும்மா நடந்து வந்து, 2 டயலாக் பேசிட்டு காணாம போன மாதிரி இருந்தது. அந்த கேரக்டருக்கு எந்த நோக்கமும் இல்ல, மோசமா எழுதப்பட்டிருந்தது.
இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜின் LCUவில் இணைந்த வாத்தி பட நடிகை.. வைரலாகும் போஸ்டர்!
மேலும் நான் கூலி படத்தில் படத்துல கமிட் ஆகாததால், கூலி படத்தில் அந்த சீன் எப்படி வரும் என எனக்கு தெரியவில்லை. ஜாலியான ஒரு கேமியோவாக இருக்கும் என நினைத்தேன், ஆனால் அது அப்படி இல்லை. கூலி படத்தில் நடிச்சது பெரிய மிஸ்டேக்தான். இனிமே அடுத்தடுத்த படங்களில் அதிகம் கவனமாக இருப்பேன்” என நடிகர் ஆமிர்கான் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
வைரலாகும் ஆமிர்கான் பேசிய பதிவு :
Coolie was a big Mistake #Amirkhan #aamirkhan #Bollybuzz #Coolie pic.twitter.com/W9AiyRM0t4
— Tamil Movies (@KollywoodByte) September 12, 2025
மேலும் கூலி படத்தை அடுத்து, ஆமிர்கான் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் சூப்பர் ஹீரோ திரைப்படம் ஒன்று உருவாக உள்ளதாக கூறப்பட்டநிலையில், தற்போது அந்த படமானது கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.