காந்தா படத்திற்கு வந்த புதிய சிக்கல்… தடை செய்யக்கோரி வழக்கு
Kaantha Movie Case Update : பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் காந்தா சாப்டர். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்திற்கு தடை கோரி வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.

காந்தா
மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan). இவர் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வெற்றியைக் கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது என்பதே உண்மை. குறிப்பாக நடிகர் துல்கர் சல்மானை ரெட்ரோ நாயகன் என்று அழைக்கும் அளவிற்கு பல ரெட்ரோ காலக்கட்ட படங்களுக்கு அழகாக பொருந்துவிட்டார் நடிகர் துல்கர் சல்மான். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் ரெட்ரோ காலக்கட்ட கதையாக இருந்தால் படக்குழுவினர் துல்கர் சல்மானை தான் முதல் தேர்வாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தனது நடிப்பில் வெளியாகும் படங்கள் மட்டும் இன்றி தனது தயரிப்பு நிறுவனமான வேஃபரர் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிக்கப்படும் படங்களும் துல்கர் சல்மனுக்கும் வெற்றியைக் குவித்து வருகின்றது. தற்போது நடிகர் துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் தொடர்ந்து 4 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதில் தமிழ் சினிமாவில் உருவாகி வந்த படம் தான் காந்தா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
காந்தா படத்திற்கு வந்த புதிய சிக்கல்… தடை செய்யக்கோரி வழக்கு:
இந்த நிலையில் பீரியட் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்த காந்தா படம் பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை தழுவி படமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படம் எடுக்கும் முன்பு அவரின் சட்டப்பூர்வமான வாரிசுகளிடம் உரிய அனுமதியைப் பெறவில்லை என்றும் அதற்கான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கின் மீது காந்தா படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. படம் வருகின்ற 14-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ள நிலையில் இந்த வழக்கு படத்தின் வெளியீட்டிற்கு சிக்கலாக அமைந்துள்ளது.
Also Read… திரையரங்குகளில் 75 நாட்களைக் கடந்தது லோகா சாப்டர் 1… படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு!
காந்தா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
4 DAYS to experience incredible performances of Kaantha 🎥
Trailer out now! Kaantha releasing on 14th November 💥
Tamil – https://t.co/rv14BZV61E
Telugu – https://t.co/FwP8wAvXPI
A @SpiritMediaIN and @DQsWayfarerFilm production 🎬#Kaantha #DulquerSalmaan #RanaDaggubati… pic.twitter.com/YPX8vjG5Jx
— Spirit Media (@SpiritMediaIN) November 10, 2025