விஜய் டிவியில் சீரியலில் நடிக்க வந்த பிரபல சினிமா நடிகை.. அட இவரா? விஜய் டிவியில் சீரியலில் நடிக்க வந்த பிரபல சினிமா நடிகை.. அட இவரா?

Vijay TV serial : தமிழ் மக்கள் மத்தியில் சினிமாவை விடமும் தொலைக்காட்சி அதிக கவனத்தையும், பிரபலத்தையும் பெற்றுள்ளது. அந்த விதத்தில் தமிழில் படங்களில் நடித்துவந்த பிரபல நடிகை, தற்போது விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்துள்ளார். எந்த சீரியலில், அந்த நடிகை யார் என பார்க்கலாம்.

விஜய் டிவியில் சீரியலில் நடிக்க வந்த பிரபல சினிமா நடிகை.. அட இவரா? விஜய் டிவியில் சீரியலில் நடிக்க வந்த பிரபல சினிமா நடிகை.. அட இவரா?

விஜய் டிவியில் சீரியல்

Updated On: 

08 Mar 2026 20:16 PM

 IST

சினிமாவை ஒப்பிடும்போது தமிழில் தொலைக்காட்சி சீரியல்கள் (Television serials) ரசிகர்களின் ஆர்வத்துடன் ஈர்த்துவருகிறது. அதிலும் இல்லத்தரசிகள், இளம் பெண்கள் என பலரும் சினிமாவை விடவும் சீரியல்கள் பார்ப்பதில் ஆர்வமாக இருகிறார்கள். அந்த விதத்தில் தமிழில் மிகவும் பிரபலமான சீரியல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளாக விஜய் டிவி (Vijay TV), சன் டிவி (Sun TV) மற்றும் ஜீ தமிழ் (Zee Tamil) போன்ற 3 தொலைக்காட்சியும் முன்னிலை வகிக்கிறது. இதில் எந்த தொலைக்காட்சி வார இறுதியில் டிஆர்பி-யில் முன்னிலை வகிக்கிறது என்பதுதான் போட்டியே. அந்த விதத்தில் விஜய் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்கட்சி இருவருக்கும் இடையே போட்டி நிலவிவருகிறது.

இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் புது புது தொடர்கள் ஒளிபரப்பப்பட்டுவரும் நிலையில், தற்போது தமிழ் பிரபல நடிகை ஒருவர் சீரியலில் நடித்துவருகிறாராம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் “சிந்து பைரவி” (Sindhu Bhairavi) என்ற தொடரில் பிரபல தமிழ் நடிகை இணைந்துள்ளாராம். அந்த நடிகை வேறுயாருமில்லை நடிகை அம்பிகா தான் (Ambika).

இதையும் படிங்க: குந்தவையை கொஞ்சநாள் வீட்டிலே குந்தவைக்கிறது நல்லது – திரிஷா குறித்து பார்த்திபன் பரபரப்பு பேச்சு!

சிந்து பைரவி தொடரின் புது புரோமோ குறித்த பதிவு:

தமிழில் பிரபல 80ஸ் கதாநாயகியாக நடித்துவந்தவர் நடிகை அம்பிகா. இவர் கமல்ஹாசன் முதல் பல்வேறு நடிகர்களுடன் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் சன் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்திருக்கும் நிலையில், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் சிந்து பைரவி என்ற தொடரிலும் நடித்துவருகிறார். இது தொடர்பான புரோமோ சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இதையும் படிங்க: டியூட் பார் 2 எப்போ வரும்? இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் கலகல ரிப்ளை

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிந்து பைரவி தொடரானது மக்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறது. இதில் தற்போது விவாகரத்து தொடர்பான விஷயங்கள் நடைபெற்றுவரும் நிலையில், சிந்து கதாபாத்திரத்திற்காக வாதாடும் வக்கீல் வேடத்தில் நடிகை அம்பிகா நடித்துள்ளார். இதற்கு பின் இந்த சீரியலில் என்ன திருப்பங்கள் இருக்கிறது என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நடிகை அம்பிகா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

நடிகை அம்பிகா ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருந்த நிலையில், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரட்டும் சிந்து பைரவி என்ற தொடரிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் இந்த சீரியலின் மூலம் மக்களிடையே இவருக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது குறித்த தகவல்கள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுவருகிறது.

Follow Us
Related Stories
Samantha: ஒரு நல்ல ஆண் மகனுக்கு எடுத்துக்காட்டே அந்த நடிகர்தான் – சமந்தா சொன்ன நடிகர் யார் தெரியுமா?
பள்ளியில் காதலித்தவர்களை தேடிச் செல்லும் நாயகன், நாயகி – ஓடிடியில் வெளியாகி உள்ள வித் லவ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
இந்தியன் 3 பட ஷூட்டிங்.. தயாரிப்பு நிறுவனத்திற்கு கெடுவிதித்த சங்கர்.. பின்னணி என்ன?
மான்யவர் மோஹே விளம்பரத்தில் விஜய் தேவர்கொண்டா – ரஷ்மிகா ஜோடி.. 3 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை..
RJ Balaji: ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை… இன்னும் பத்து நாளில் கருப்பு பட அப்டேட் வரும் – ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ!
மூணு வேளை சோத்துக்கு நாம படுற பாடு இருக்கே… சர்க்கார் பட ஷூட்டிங்கில் பேசிய விஜய் – ஓபனாக சொன்ன யோகி பாபு
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு