அண்ணா, எம்.ஜி.ஆர் வழியில் தலைவர விஜய் – த.வெ.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா..
TVK Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அண்ணா - எம்.ஜி.ஆர் வழியில் தலைவர் விஜய் செயல்படுவார் என தெரிவித்துள்ளார். மேலும் பலக்கட்ட தடைகளை தாண்டி தான் இந்த மாநாடு நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

த.வெ.க மதுரை மாநாடு, ஆகஸ்ட் 21, 2026: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்ற வருகிறது. இந்த மாநாட்டில் அண்ணா எம்.ஜி.ஆர் வழியில் விஜய் என மாநாட்டில் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். அதேபோல் தம்பி வா தலைமை ஏற்க வா என ஆதவ் அர்ஜுனா மேடையில் குறிப்பிட்டார். தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு உள்ளனர். முன்னதாக தலைவர் விஜய் நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு வருகை தந்து தனது பெற்றோரிடம் வாழ்த்துக்களை பெற்றார். அதனைத் தொடர்ந்து விழா மேடையில் இருந்து அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக்கில் மக்கள் மத்தியில் நடந்து சென்றார். அப்போது அங்கு இருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். பின்னர் அவர் மீது வீசப்பட்ட கட்சி துண்டுகளை அவர் தலையில் கட்டி தோளில் அணிந்தும் நடந்து சென்றார்.
பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் செல்பி மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தார். பின்னர் மேடைக்கு திரும்பியவுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலாலர் ஆதவ் அர்ஜுனா, “ 1967 ஆம் ஆண்டு, எப்படி அண்ணா தம்பிகளை தலைமை ஏற்க அழைத்தாரோ, அதேபோல் மதுரை மண்ணில் தலைவர் விஜய் அன்புடன் அழைக்கிறார். 2026-ல் முதல்வராக பதவியேற்க உள்ளார் விஜய்.
குடும்ப அரசியலுக்காக கொள்கையை விட்ட கலைஞர் கருணாநிதி:
1967 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா எல்லோருக்கும் சமமான ஒரு அரசியலை, சிறுபான்மையினருக்கான அரசியலை உருவாக்கித் தந்தார். ஆனால், கலைஞர் கருணாநிதி அந்த அரசியலை தனது குடும்பத்தினருக்காக பயன்படுத்திக் கொண்டார். அதனை தோற்கடிக்கும் வகையில் தலைவர் எம்.ஜி.ஆர் தனித்த அரசியலை உருவாக்கினார்.
ஆனால் இன்று, தமிழகத்தில் நடைபெறும் அரசியல் சமத்துவத்தை காற்றில் பறக்கவிட்டுள்ளனர். இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அண்ணாவின் கொள்கைகளை கைவிட்டுள்ளார். அண்ணாவின் குறிக்கோளை இன்று முன்னெடுத்து செல்லும் ஒரே தலைவர் விஜய்தான்.
மேலும் படிக்க: த.வெ.கவின் இரண்டாவது மாநில மாநாடு.. நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்..
அண்ணா – எம்.ஜி.ஆர் வழியில் விஜய்:
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா கொண்டு வந்த அரசியலை மறந்து, இன்று தமிழகத்தில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் இன்று பாஜகவை பின்புற வாசல் வழியாக அதிமுக வரவேற்கிறது. இந்த மாநாட்டிற்கு தேவையான ஏற்பாடுகளைத் தடுக்க, திமுக அமைச்சர் மூர்த்தி பல்வேறு தடைகள் ஏற்படுத்தினார். தடைகள் மீறி இந்த மாநாடு நடந்துள்ளது.
மாநில சுயாட்சிக்கு எதிராக பாஜக தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த முதலமைச்சர் பதவி நீக்கம் மசோதா. தமிழகத்தில் அண்ணா – எம்.ஜி.ஆர் வழியில் விஜய் செயல்படுவார்” என பேசியுள்ளார்.