சினிமாவுக்கு ஆழைத்து செல்லாத கணவர்.. விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட 23 வயது இளம்பெண்..

Tiruppu Crime: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கணவர் சினிமா பார்க்க அழைத்து செல்லாததால் மனமுடைந்த 23 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவுக்கு ஆழைத்து செல்லாத கணவர்.. விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட 23 வயது இளம்பெண்..

தற்கொலை செய்து கொண்ட மனைவி

Published: 

09 Sep 2025 12:39 PM

 IST

திருப்பூர், செப்டம்பர் 9, 2025: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, கணவர் சினிமா பார்க்க அழைத்து செல்லாததால் மனம் உடைந்து, ஆத்திரமடைந்த 23 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினசரி குற்றச் சம்பவங்களும் தற்கொலைச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சிறிய விஷயங்களாக இருந்தாலும், அதனை ஏற்கும் மனப்பான்மை இல்லாததால், விரக்தி அடைந்து இவ்வாறான முடிவுகளை எடுப்பது அதிகரித்து வருகிறது.

சினிமாவுக்கு அழைத்து செல்லுமாறு கணவனிடம் கேட்ட மனைவி:

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பாண்டியாண்டி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 20). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சௌமியா (வயது 23). இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். புதுமணத் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

மேலும் படிக்க: கோவையில் அதிர்ச்சி.. விஷம் குடித்த அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பிக்கு அரிவாள் வெட்டு.. நடந்தது என்ன?

சமீபத்தில் சௌமியா தன்னை சினிமாவுக்கு அழைத்துச் செல்லுமாறு கணவரிடம் கேட்டுள்ளார். குறிப்பாக, தமிழ் திரைப்படத் துறையில் பல்வேறு படங்கள் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஒரு வாரமாக சௌமியா கணவர் ஜீவாவிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால், வேலை காரணமாக ஜீவா அழைத்து செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மனமுடைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி:

இதனால் மனமுடைந்த சௌமியா, செப்டம்பர் 8, 2025 அன்று இரவு, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் சினிமாவுக்கு அழைத்து செல்லாததால் ஆத்திரத்தில் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?

சௌமியா தூக்கிட்டு தற்கொலை செய்ததை அறிந்ததும், காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கேயம் அருகே கணவர் சினிமா பார்க்க அழைத்து செல்லாததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories
சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் என்றால் ஏற்கத்தக்கது அல்ல – விஜயின் பிரச்சாரம் குறித்து அண்ணாமலை கருத்து..
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் எங்கே பேசுகிறார்? அனுமதி வழங்கிய காவல் துறை..
முதல்வர் வேட்பாளரை மாற்றினால் நாங்கள் ஆதரவு தர தயார்.. எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் டிடிவி தினகரன்..
ஒரே நாளில் 3 மாவட்டங்கள்.. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை.. தலைவர் விஜய் சூறாவளி சுற்றுப்பயணம்..
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?
அதிமுகவை மக்கிய கோட்டையாக மாற்றும் எடப்பாடி பழனிசாமி.. கருணாஸ் கண்டனம்..