“மன்னராட்சி முடிவுக்கு வந்தது”.. தவெக வெற்றியை மறைந்த 41 கரூர் குடும்பத்தினருக்கு சமர்ப்பிக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனா

Tamilnadu Assembly Election: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலேயே அவர் தோல்வியடைவார் என்பதைத் தாங்கள் ஏற்கனவே கணித்திருந்ததாக ஆதவ் அர்ஜுனா கூறினார். கொளத்தூர் பிரச்சாரத்தின் போது ஒரு லட்சம் பேர் கூடியபோதே, மாற்றத்திற்கான அறிகுறி தெரிந்ததாகவும், அவர் கூறியுள்ளார்.

மன்னராட்சி முடிவுக்கு வந்தது.. தவெக வெற்றியை மறைந்த 41 கரூர் குடும்பத்தினருக்கு சமர்ப்பிக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா

Updated On: 

04 May 2026 17:40 PM

 IST

தமிழக அரசியல் வரலாற்றில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய புரட்சி உருவாகியுள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வெற்றியைத் தமிழக மக்களும், குறிப்பாகப் பெண்களும் இளைஞர்களும் இணைந்து சாத்தியமாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். தமிழக வெற்றிக் கழகம் 10 எம்எல்ஏக்கள் கூட வெற்றி பெற முடியாது என்று அவதூறு பரப்பட்டது. தலைவர் விஜய் மீது கடுமையான அவதூறுகளையும் முன்வைத்தனர். தவெகவுக்கு எதிராக ஒரு அரசே இருந்தபோதும், வெற்றி பெற்றுள்ளோம் என்று நெகிழ்ந்தார்.

மேலும் படிக்க: Tamil Nadu Election 2026 Results LIVE: தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? முன்னிலையில் தவெக!

மன்னராட்சிக்கு முடிவு:

“பிறப்பால் அதிகாரத்திற்கு வரும் குடும்ப ஆதிக்கத்திற்கும், மன்னராட்சி மனப்பான்மைக்கும் தமிழக மக்கள் இன்று முடிவுரை எழுதியுள்ளனர்” என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். திமுக அரசின் கொடுமையான ஆட்சிக்கு எதிராகப் பெண்களும் இளைஞர்களும் வெகுண்டெழுந்த நாள் இது என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். கரூரில் எங்களது குடும்பத்தில் 41 உயிர்களை இழப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த ஒரு நொடியில் இருந்து திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர்.

விஜய் மீதான அவதூறுகளும் எதிர்ப்புகளும்:

தமிழக வெற்றிக் கழகம் 10 இடங்களில் கூட வெற்றி பெறாது எனப் பல செய்தி நிறுவனங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அவதூறு பரப்பியதாக அவர் குற்றம் சாட்டினார். தவெக தலைவர் விஜய் அவர்களின் பிரச்சாரத்தை முடக்கப் பல முயற்சிகள் நடந்ததாகவும், தொலைக்காட்சிகளில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 40 சதவீத வாக்குகளை தவெக பெறுவோம் என்று கூறியபோது எள்ளி நகையாடினார்கள். நாங்கள் அமைதியான வழியில் எங்களுடைய பிரச்சாரத்தை முன்னெடுத்தோம். ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுகவின் தவறுகளை சுட்டிக்காட்டி, இன்று தலைவர் விஜய் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளார்.

கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலேயே அவர் தோல்வியடைவார் என்பதைத் தாங்கள் ஏற்கனவே கணித்திருந்ததாக ஆதவ் கூறினார். கொளத்தூர் பிரச்சாரத்தின் போது ஒரு லட்சம் பேர் கூடியபோதே மாற்றத்திற்கான அறிகுறி தெரிந்ததாகவும், அங்கு ஒரு ஓட்டுக்கு 4,000 ரூபாய் வரை விநியோகம் செய்யப்பட்டும் மக்கள் அதனை நிராகரித்து நேர்மையான அரசியலைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியல் உதயம்:

தமிழகத்தில் நிலவி வந்த பண அரசியல், சாதி அரசியல் மற்றும் மத அரசியல் ஆகியவற்றைத் தகர்த்தெறிந்து, தலைவர் விஜய் அவர்களின் நம்பிக்கைக்கு மக்கள் பெரிய வெற்றியைத் தந்துள்ளனர். இது வெறும் தேர்தல் வெற்றி மட்டுமல்ல, தமிழக அரசியலையே புரட்டிப் போட்டுள்ள இந்தியாவே எதிர்பார்க்காத ஒரு வரலாற்றுச் சாதனை என்று கூறினார்.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..