234 தொகுதிகளிலும் விஜய்தான் போட்டி – த.வெ.க மாநாட்டில் தலைவர் விஜய் வைத்த டிவிஸ்ட்..

TVK Madurai Conference Vijay Speech: மதுரையில் நடந்த த.வெ.க மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பேசுகையில், 234 தொகுதிகளிலும் விஜய் தான் போட்டி என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களுக்காக சேவை செய்வதே எனது பணி என தெரிவித்துள்ளார்.

234 தொகுதிகளிலும் விஜய்தான் போட்டி - த.வெ.க மாநாட்டில் தலைவர் விஜய் வைத்த டிவிஸ்ட்..

தவெக மாநாட்டில் விஜய்

Updated On: 

21 Aug 2025 18:34 PM

மதுரை, ஆகஸ்ட் 21, 2025: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய கட்சி தலைவர் விஜய் ஒவ்வொரு தொகுதியிலும் நிற்கும் வேட்பாளர் விஜய் தான் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என பேசி உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது அதில் குறிப்பாக தலைவர் விஜய் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி உள்ளார். குறிப்பாக, அதிமுக பாஜக கூட்டணி திமுக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

இது போன்ற சூழலில் மேடையில் பேசிய தலைவர் விஜய் வேட்பாளர் பட்டியலை வெளியிடவா என கேட்டு பேசினார். அப்போது பேசிய அவர், ” எல்லோரும் கட்சி ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போறதுக்கு முயற்சி பண்ணுவாங்க.. நாங்க ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போனதுக்கு அப்புறம்தான் கட்சியே ஆரம்பிச்சிருக்கோம்.

மேலும் படிக்க: மகளிர் ஊக்கத்தொகை முதல் தூய்மை பணியாளர்கள் வரை.. தமிழக அமைச்சர்களை சாடிய நிர்மல் குமார்!

234 தொகுதிகளிலும் நான் தான் நிற்கிறேன் என்று நினைத்து வாக்களியுங்கள்:


234 தொகுதியிலும் நான் வேட்பாளர் என நினைத்து வாக்களியுங்கள்; இந்த முகத்துக்காக வாக்களித்தால், உங்க வீட்டிலுள்ள உங்க வேட்பாளர் ஜெயித்தது போல. கூடிய சீக்கிரம் மக்களை போய் சந்திக்கப் போறேன். அவங்களோடு மனசு விட்டு பேசப் போறேன். அதுக்கு அப்புறம் இந்த சாதாரண முழக்கம், இடிமுழக்கமாக மாறும். உங்கள் வீட்டு ரேஷன் கார்டில் என்னுடைய பெயர் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருமே ஒன்றுதான். நமக்கிடையே எந்த அரசியலும் வர முடியாது. என்னிடமிருந்து உங்களையும், உங்களிடமிருந்து என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.

மேலும் படிக்க: கூட்டணி கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் நிச்சயம் பங்கு – த.வெ.க தலைவர் விஜய் உறுதி..

நான் ஓய்வு பெற்ற பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்களம் தேடி அரசியலுக்கு வந்துள்ளேன். மாபெரும் படை வீரர்களுடன், எல்லாவற்றிற்கும் தயாராக வந்திருக்கிறேன். இவ்வளவு தயாராக நான் அரசியலுக்கு வருவதற்கு ஒரு காரணம் உள்ளது — நன்றி கடன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள். எனக்காக நிற்கிறீர்கள். நீங்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம்.

மக்களுக்கு சேவை செய்து கிடப்பதே எனது கடமை:

இந்த பொதுவெளியில் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: நான் மக்களை வணங்குகிறேன். அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இவ்வளவு செய்த மக்களுக்காக நான் நிச்சயமாக செய்ய வேண்டும். வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு ஆதரவாக, அவர்களுக்கு துணையாக நிற்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை. இனி இதுதான் என் வேலை. என்னை மனதால் நேசிக்கும் மக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன் — உண்மையாக பேச, உணர்வோடு பேச, உங்களுக்காக சேவை செய்ய, உங்கள் விஜய் நான் வருகிறேன். சொல்லுவது முக்கியமல்ல; செயல்தான் முக்கியம். நல்லது செய்வதற்காக மட்டுமே இந்த விஜய்” என பேசியுள்ளார்.