மீண்டும் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை..

Tamil Nadu CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 13, 2025) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 2026 இல் மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது முழு வீச்சுடன் களப்பணியாற்றிடுவோம் என தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை..

கோப்பு புகைப்படம்

Published: 

13 Aug 2025 16:47 PM

சென்னை, ஆகஸ்ட் 13, 2025: 2026 சட்டமன்ற தேர்தல் நெரும்க்கக் கூடிய நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு கட்சி தரப்பிலும் மாவட்ட செயலாளர், மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 13 2025 தேதியான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் கூட்டமானது நடைபெற்றது. இதில் முக்கியமாக மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமாக திமுகவின் கோரிக்கைகளை ஏற்று நியாயமான முறையில் தேர்தல் ஆணையம் தேர்தலில் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

3 மகத்தான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது – முதல்வர் ஸ்டாலின்:

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை நீட்டிப்பதற்கான பரிந்துரை, கள நிலவரம் எப்படி உள்ளது, தேர்தலை சந்திப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு உரையாற்றினார்.

அதில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி பிரச்சனைகளைக் களையவும் , மக்கள் குறைகளை தீர்க்கும் வகையிலும் 8 மணடலங்களாக பிரிக்கப்பட்டு 8 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களின் குறைகளை தீர்த்து வைக்க ‘உங்களுடன் ஸ்டாலின்’ , மருத்துவ உதவிகள் கிடைத்திட ‘நலம் காக்கும் ஸ்டாலின், வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை கொடுக்கும் ‘தாயுமானவர் திட்டம்’– இப்படி மகத்தான மூன்று அரசு திட்டங்களை தற்போது நாம் செய்லபடுத்தி வருகிறோம். இது மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க: நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்..

BLA 2, BDA நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தன. அதேபோல BLC (BOOTH LEVEL COMMITTE ) அமைத்து உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். 100 வாக்காளர்களுக்கு ஒரு 1 BLC உறுப்பினர் என்ற விகிதத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். தற்போது பாஜக அரசு தேர்தல் ஆணையத்தின் மூலம் SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த சட்டம் மூலம் என்னென்ன அடடூழியங்களை பீகாரில் மேற்கொண்டு வருகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி:

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு கடந்த ஆண்டுகளில் துபாய் , சிங்கபூர் , ஜப்பான், ஸ்பெயின் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள முதலீட்டாளர்களுடன் பேசியதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் கொண்டுவரப்பட்டு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தங்களது நிறுவனங்களை தொடங்கி உள்ளனர். அதன் காரணமாக சுமார் 30 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெருகி உள்ளது.

இது வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை என்பதற்கான சாட்சிதான் சமீபத்தில் வெளிவந்துள்ள இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி விகிதம் என்ற செய்தி. ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல் படி இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.

பொருளாதாரத்தை ஈட்ட வெளிநாட்டு பயணம்:

எப்படி இதற்கு முன்புமுதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேனோ அதே போல வருகிற செப்டம்பர் மாதமும் வெளிநாடு செல்ல உள்ளேன் என்ற செய்தியையும் இந்த நேரத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். வருகின்ற செப்படம்பர் மாதத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வர உள்ளேன்.

வரும் நாட்களில் நமது கழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். அதற்கு உங்களது ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம். நீங்கள் ஆற்றும் களப்பணியே நமது இலக்கினை அடையும் முதல் படி. 2026 இல் மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது முழு வீச்சுடன் களப்பணியாற்றிடுவோம்” என பேசியுள்ளார்.

Related Stories
நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்..
கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்… உறுதியாக சொன்ன நயினார் நாகேந்திரன்.. நீடிக்கும் குழப்பம்!
திருப்பூரில் ரூ. 295 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்.. பொள்ளாச்சியில் திட்டம் என்ன?
கிருஷ்ணகிரியில் மக்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி.. 3 ஆம் கட்ட பிரச்சார பயணத்திட்டம் என்ன?
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு.. பா.ம.க மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்..
பூம்புகாரில் அன்புமணி இல்லாமல் நடக்கும் மகளிர் மாநாடு.. ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு..