தேர்தல் நடத்தை விதிகள்.. எவ்வளவு ரொக்கப்பணம் வாகனத்தில் கொண்டு செல்லலாம் தெரியுமா?

Election Rules Implemented In 5 States | தேர்தலின் போது நடத்தை விதிகள் அறிமுகம் செய்யப்படும் நிலையில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல் நடத்தை விதிகள்.. எவ்வளவு ரொக்கப்பணம் வாகனத்தில் கொண்டு செல்லலாம் தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 Mar 2026 20:10 PM

 IST

சென்னை, மார்ச் 15 : தமிழ்நாடு (Tamil Nadu), கேரளா (Kerala), புதுச்சேரி (Puducherry), அசாம் (Assam), மேற்கு வங்கம் (West Bengal) ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி மற்றும் வாக்குப்பதிவு அடங்கிய அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (ECI – Election Commission of India) வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், அமலுக்கு வந்துள்ள தேர்தல் விதிகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

5 மாநிலங்களில் அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்

  • தேர்தல் முடியும் வரை அரசு எந்த வித புதிய திட்டத்தையும் செயல்படுத்த கூடாது.
  • தேர்தல் பிரசாரங்களின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து, எந்த ஒரு தனிநபர் குறித்தும் விமர்சனமும் செய்ய கூடாது.
  • தேர்தல் விதகள் அமலுக்கு வந்த பிறகு அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்படக்கூடாது.
  • எந்த விதமான அரசு விழாக்களையும் நடத்த கூடாது.
  • அமைச்சர்கள் என்ற முறையில் எந்த விதமான பரப்புரைகளையும் மேற்கொள்ள கூடாது.
  • தேர்தல் பிரசாரங்களுக்கு கட்சி பாகுபாடு இன்றி பொது மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
  • ரொக்க பணம் கையில் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த தேர்தல்களில் இருந்ததை போலவே ரூ.50,000-க்கும் மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : K. Ponmudi Tamil Nadu Election: விழுப்புரத்தில் தொடர் வெற்றியில் திளைத்த க.பொன்முடி… மீண்டும் களமிறக்கப்படுவாரா!

விதிகளை மீறி செயல்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை

தேர்தல் முடியும் வரை அரசு, அரசியல் கட்சிகள், தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பொறுப்புடன் நடந்துக்கொள்ளும் வகையில் இந்த முக்கிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகளை மீறி செயல்படும் நபர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களும் இந்த விதிகளை பின்பற்றி நடக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

Follow Us
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்
சமூக வலைதளங்களில் பாராட்டப்படும் பிரியங்காவின் மேட் இன் கொரியா
நேதாஜியின் தொப்பியை காணவில்லை - பேரன் பரபரப்பு குற்றச்சாட்டு