கூட்டணி கனவுடன் வந்த சசிகலா.. ஒரே வார்த்தையில் “நோ” சொன்ன ராமதாஸ்.. காரணம் என்ன!
Ramadoss And Sasikala Allaince : தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸிடம் கூட்டணி தொடர்பாக சசிகலா பேச்சுவார்த்தை நடத்தி இருந்த நிலையில், ஒரே வார்த்தையில் ராமதாஸ் ஒரே வார்த்தையில் கூட்டணி தொடர்பாக பதில் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே வார்த்தையில் கூட்டணிக்கு நோ சொன்ன ராமதாஸ்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக அன்புமணி தரப்பு தனியாக செயல்பட்டு வருகிறது. அத்துடன், முன்னதாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி இணைந்து தனியாக விருப்ப மனுக்களை விநியோகம் செய்து திரும்ப பெற்றுள்ளார். இதன் காரணமாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ் தலைமையிலான பாமக இடம்பெற முடியாமல் போனது. இதேபோல, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் ராமதாஸ் இணைவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியின் போது, திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
ராமதாஸுடன் 1:30 மணி நேரம் பேசிய சசிகலா
இதனால், இரு கூட்டணியிலும் ராமதாஸ் தலைமையிலான பாமக இணைய முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த சசிகலா அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்துள்ளார். இந்த நிலையில், கடந்த மார்ச் 11- ஆம் தேதி ( புதன்கிழமை) விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்த சந்திப்பானது சுமார் 1:30 நிமிடங்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
மேலும் படிக்க: என்டிஏ கூட்டணியில் தவெக?.. டெல்லியில் பேச்சுவார்த்தை?.. நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்!!
ஒரே வார்த்தையில் “நோ” சொன்ன ராமதாஸ்
இதில், ராமதாஸிடம் உங்களுக்கு அன்புமணியை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். எனக்கு எடப்பாடி பழனிசாமியை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். எனவே, இருவரும் கூட்டணி அமைப்பதுடன், தவெக மற்றும் சிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால், இதற்கு ராமதாஸ் “நோ” சொன்னதாக கூறப்படுகிறது. அதிலும், பாட்டாளி மக்கள் கட்சி வலுவாக உள்ள தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உங்களுக்கு ஆதரவு இல்லை. உங்களுக்கு ஆதரவு இருக்கக்கூடிய தென் மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு கிடையாது.
ராமதாஸ் – சசிகலா காம்பினேஷன் ஒத்துவராது
எனவே, இந்த கூட்டணி தேர்தலுக்கு ஒத்து வராது என்று ராமதாஸ் கூறியதாக கூறப்படுகிறது. இருந்தாலும், கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக தெரிவித்திருந்தாராம். சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கான ஆலோசனைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால், ராமதாஸ் விரைவில் கூட்டணி குறித்த முடிவை எடுப்பார் என்று எதிர்பார்த்து சென்ற சசிகலாவின் முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது இது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: இன்ஸ்டா டூ சி.எம் ஆபீஸ்.. தேவா, ஜீவாவுடன் கலகலப்பாக பேசி ரீல்ஸ் எடுத்த முதல்வர் ஸ்டாலின்..