பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுக்கு அழைப்பில்லை….ஓ.பன்னீர் செல்வம்!

O Panneerselvam Latest Pressmeet : சென்னை அருகே பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக எனக்கு அழைப்பு வரவில்லை எனவும், நான் எந்த காலத்திலும் புதிய கட்சி தொடங்கவில்லை எனவும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார் .

பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுக்கு அழைப்பில்லை....ஓ.பன்னீர் செல்வம்!

பிரதமர் நிகழ்ச்சிக்கு அழைப்பு இல்லை

Updated On: 

17 Jan 2026 11:50 AM

 IST

எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அ. தி. மு. க. உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பை இன்னும் சில தினங்களில் அறிவிக்க உள்ளேன். எந்த கட்சி தேர்தலில் போட்டியிட்டாலும் மக்கள் எண்ணங்களின் படியே வெற்றி உறுதி செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கும் பொதுக் கூட்டத்துக்கான அழைப்பு எனக்கு வரவில்லை. நான் புதிதாக எந்த கட்சியும் ஆரம்பிக்க போவதாக இல்லை. அ. தி. மு. க. வில் உள்ள சட்ட விதிகளில் ஒரு சட்ட விதியை மட்டும் திருத்தம் செய்யவோ, மாற்றம் செய்யவோ கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சட்ட விதி என்னவென்றால் அ. தி. மு. க. வின் பொதுச் செயலாளர் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மூலமாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதாகும்.

அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்வு சட்டவிதி திருத்தம்

ஆனால், தற்போதைய நிலவரப்படி அந்த சட்டவிதியானது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அ. தி. மு. க.வின் சாதாரண தொண்டர் கூட பொதுச் செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்யலாம். ஆனால், அதிமுகவின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கு 10 மாவட்ட செயலாளர் முன்மொழிய வேண்டும் 10 மாவட்ட கழகச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்களை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க: யாருடன் கூட்டணி?.. ராகுல் காந்தியை சந்திக்கும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்.. இன்று இறுதி முடிவு?..

தொடர் சட்ட போராட்டத்தில் வெற்றி உறுதியாகும்

இந்த 6 வழக்குகளையும் ஒன்றிணைத்து சென்னை உயர் நீதிமன்ற சிவில் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், எங்கள் தரப்பில் உள்ள நியாயம் மற்றும் அதிமுகவின் சட்ட விதி உள்ளிட்டவற்றை முன் வைத்து வழக்காடி கொண்டிருக்கிறோம். எங்களது தொடர் சட்டப் போராட்டத்தில் உறுதியாக வெற்றி கிடைக்கும். அதிமுகவில் பிரிந்து இருக்கின்ற சக்திகள் அனைத்தும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். அதன்படி, அனைவரும் மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம். ஜி. ஆர்., ஜெயலலிதா கட்சியை வழி நடத்திய படி, மீண்டும் அ. தி. மு. க. வை கட்டுக்கோப்புடன் வழி நடத்த வேண்டும்.

11 தேர்தல்களில் தோல்வி அடைந்த அதிமுக

அதிமுகவின் சட்ட விதிகளுக்கு மாறாக கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றது முதல் தற்போது வரை நடைபெற்ற 11 தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது என்று தெரிவித்தார். மதுராந்தகம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் மேடை ஏற உள்ள நிலையில், ஓ. பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் டிடிவி தினகரன்? அரசியல் பரபரப்பை கிளப்பிய பேனர்..

‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..
51 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம்.. விடுதலை செய்யப்பட்ட நபர்..
பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இதை செய்தால் போதும்..
"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!