ஏப்ரல் 6ம் தேதி கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் வைகோ.. முழு அட்டவணை இதொ..

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடையநல்லூரில் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதன் பின்னர், ஏப்ரல் 7ஆம் தேதி கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளில்; ஏப்ரல் 8ஆம் தேதி மதுரை தெற்கு; ஏப்ரல் 9ஆம் தேதி மொடக்குறிச்சி; ஏப்ரல் 10ஆம் தேதி சீர்காழி; ஏப்ரல் 11ஆம் தேதி காட்டுமன்னார்கோயில், திருவிடைமருதூர், நன்னிலம், நாகை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

ஏப்ரல் 6ம் தேதி கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் வைகோ.. முழு அட்டவணை இதொ..

கோப்பு புகைப்படம்

Published: 

02 Apr 2026 15:47 PM

 IST

சென்னை, ஏப்ரல் 2, 2026: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரக்கூடிய ஏப்ரல் 6ஆம் தேதியிலிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் வேட்புமனு தாக்கலும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது நான்கு இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அதில் முதலில் மூன்று இடங்களில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு இடத்தில் தனிச்சின்னத்திலும் போட்டியிட தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நான்கு தொகுதிகளிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: பிரதமர் மோடி சென்னை வருகை.. பாதுகாப்புப் பணியில் 3,000 போலீசார்.. முக்கிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!!

ஏப்ரல் 6ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கும் வைகோ:

அதனைத் தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடையநல்லூரில் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதன் பின்னர், ஏப்ரல் 7ஆம் தேதி கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளில்; ஏப்ரல் 8ஆம் தேதி மதுரை தெற்கு; ஏப்ரல் 9ஆம் தேதி மொடக்குறிச்சி; ஏப்ரல் 10ஆம் தேதி சீர்காழி; ஏப்ரல் 11ஆம் தேதி காட்டுமன்னார்கோயில், திருவிடைமருதூர், நன்னிலம், நாகை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 12ஆம் தேதி பாபநாசம், திருவரும்பூர், திருச்சி மேற்கு; ஏப்ரல் 13ஆம் தேதி கந்தர்வகோட்டை, சிவகங்கை, மதுரை வடக்கு, மதுரை தெற்கு; ஏப்ரல் 14ஆம் தேதி பொள்ளாச்சி, மொடக்குறிச்சி; ஏப்ரல் 15ஆம் தேதி சீர்காழி; ஏப்ரல் 16ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், கடையநல்லூர்;

மேலும் படிக்க: திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய்.. திருச்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற போது பரபரப்பு!!

ஏப்ரல் 17ஆம் தேதி சீர்காழி; ஏப்ரல் 18ஆம் தேதி திருச்செங்கோடு, மொடக்குறிச்சி; ஏப்ரல் 19ஆம் தேதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை; ஏப்ரல் 20ஆம் தேதி கடையநல்லூர்; ஏப்ரல் 21ஆம் தேதி மதுரை தெற்கு ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தேர்தல் நெருங்கும் சூழலில், ஏப்ரல் 21ஆம் தேதி வரை தொடர்ந்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
Related Stories
திமுக–பாஜகவை நம்பாதீர்கள்; என்னை 100% நம்புங்கள்.. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – திருச்சியில் விஜய் பரப்புரை..
பெரம்பூரில் போட்டியிடும் திலகபாமா.. வேட்புமனு தாக்கலின் போது தராசுடன் சென்றதால் பரபரப்பு..
திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய்.. திருச்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற போது பரபரப்பு!!
பிரதமர் மோடி சென்னை வருகை.. பாதுகாப்புப் பணியில் 3,000 போலீசார்.. முக்கிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!!
“மக்களை நம்பாதவரே 2 தொகுதிகளில் போட்டியிடுவார்”.. விஜய்யை கடுமையாக சாடிய சீமான்!!
“நாங்கள் சங்கி என்றால், பாஜகவோடு கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா?”.. முதல்வருக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!!
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..