விஜய்யின் மனதில் பாஜக இருக்கிறது.. அதனால் எங்கள் வேட்பாளரின் பெயரை கூறினார் – குஷ்பு பதில்

புதுசசேரியில் பரப்புரையில் ஈடுபட்ட விஜய் தனது கட்சியின் வேட்பாளர் பெயரை மாற்றிக் கூறிய நிலையில், அவரது மனதில் பாஜக தான் இருக்கிறது. அதனால் தான் அவர் வேட்பாளர் பெயரை மாற்றி கூறியிருக்கிறார் என தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்திருக்கிறார்.

விஜய்யின் மனதில் பாஜக இருக்கிறது.. அதனால் எங்கள் வேட்பாளரின் பெயரை கூறினார் - குஷ்பு பதில்

விஜய் - குஷ்பு

Published: 

05 Apr 2026 19:01 PM

 IST

புதுச்சேரி, ஏப்ரல் 5 : விஜய்யின் மனதில் பாஜக இருப்பதால் தான் புதுச்சேரியில் அவரது கட்சி வேட்பாளருக்கு பதிலாக பாஜக வேட்பாளரின் பெயரி தெரிவித்தார் என்று குஷ்பு தெரிவித்தார். தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு ஏப்ரல் 5, 2026 அன்று புதுச்சேரி தொண்டமாநத்தம் முதல் பத்துக்கண்ணு சந்திப்பு வரை ரோடு ஷோ நடத்தினார். அப்போது தேசிய ஜனநயாக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடக்கிறது. மாணவர்களிடம் மது மற்றும் போதைப்பொருட்கள் எளிதில் கிடைக்கிறது. ஆனால் புதுச்சேரியில் முன்னேற்றமான ஆட்சி நடக்கிறது என்றார்.

மேலும் பேசேயி அவர், புதுச்சேரியில் உள்ள ரெஸ்டோபார்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள சாராயத்துக்கும் வித்தியாசம் உள்ளது. மக்களை ஏமாற்றி, பொய் வாக்குறுதிகளை அளித்து கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை திமுக அளித்தது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய அரசு வரி சலுகை அளித்துள்ளது. ஆனால் அதை பற்றி திமுக அரசு பேசவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக பொய்யான வாக்குறுதிகளை அளிக்க முடியாது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது என்பது மிகப்பெரிய நடவடிக்கை. இதுகுறித்து பல மாநிலங்களுடன் பேச வேண்டும். அதனை சரியான நேரத்தில் பாஜக செய்யும் என்றார்.

இதையும் படிக்க : தேர்தலில் கவனம் பெறும் திருப்பரங்குன்றம் தொகுதி.. மீண்டும் வசமாக்குவாரா வி.வி.ராஜன் செல்லப்பா!

‘விஜய்யின் மனதில் பாஜக இருக்கிறது’

மேலும் பேசிய அவர் மல்லிகார்ஜூன கார்கே தனது நாற்காலியை காப்பற்ற பிரதமாராகவோ, குடியரசுத் தலைவாராகவோ ராகுல் காந்தி ஆவார் என சொல்வார். ராகுல் காந்தி பிரதமராவது கனவு. அவர்கள் கனவு காண்பதற்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அவரால் ஒருபோது பிரதமாரக முடியாது. புதுச்சேரி அரசு மதுவை மட்டும் நம்பி இல்லை. இது சுற்றுலா நகரம், இங்கு அளவோடு தான் மது உள்ளது. ஆனால் தமிழக அரசு மது விற்பனையை மட்டுமே நம்பி அரசு செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்னை தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. ஆனால் அடிப்படை வசதிகள் இல்லை. தமிழ்நாட்டில் துப்பரவு பணியாளர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

இதையும் படிக்க : சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை… தொல்.திருமாவளவன் திடீர் முடிவு.. பின் வாங்க என்ன காரணம்!

விஜய் நேற்று தான் அரசியலுக்கு வந்தார். அதனால் அவரை பற்றி பேச வேண்டியதில்லை. அவர் மனதில் பாஜ உள்ளதால் தான் புதுச்சேரியில் பிரச்சாரத்தின்போது அவர் கட்சி வேட்பாளருக்கு பதிலாக பாஜக வேட்பாளர் பெயரை கூறியுள்ளார். பிரதமர் மோடி வருகையால் தான் திமுக வலுப்பெறுகிறது என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். அப்போதும் ஸ்டாலினுக்கு பாஜக தான் தேவைப்படுகிறது என்றார்.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்