ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெல்லையில் பாஜக மாநாடு.. தமிழகம் முழுவதும் நடத்த திட்டம்..

BJP Meeting: 2026 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாத காலங்களே இருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முதல் மாநாடு ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் என காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி வழிகாட்டு முகாம் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெல்லையில் பாஜக மாநாடு.. தமிழகம் முழுவதும் நடத்த திட்டம்..

காட்டங்குளத்தூரில் நடந்த பாஜக கூட்டம்

Updated On: 

06 Jul 2025 13:09 PM

செங்கல்பட்டு, ஜூலை 6, 2025: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து முக்கிய மாநாடுகள் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அ.தி‌‌.மு‌.க.வுக்கு நாம் சுமை அல்ல…பலம் என்பதை காட்ட வேண்டும் என்று பா.ஜ.க. பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான வழிகாட்டு முகாமில் தலைமை அறிவுரை வழங்கியுள்ளது. தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் பா.ஜ.க. பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான வழிகாட்டு முகாம் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

பா.ஜ.க. பூத் கமிட்டி வழிகாட்டு முகாம்:


இதில் ” பா.ஜ.க. மாநில தலைமை சார்பில் வழங்கப்பட்டுள்ள அறிவிப்பில், தி.மு‌.க. மக்கள் பிரச்சினைகளை தற்போது தீர்க்காது. ஏனெனில் அவர்கள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். மாதம் ஒரு முறை ஒவ்வொரு பூத் அளவிலும் தெருமுனை கூட்டம் மற்றும் மக்கள் பிரச்சினைகளை கவனம் செலுத்துங்கள்.

தமிழகம் முழுவதும் மாநாடு நடத்த திட்டம்:

அப்படி செய்தால் நிச்சயமாக நம்முடைய வாக்கு சதவீதம் அதிகரிக்கும். தீபாவளிக்கு மிகப்பெரிய சர்ப்பிரைஸ் காத்திருக்கிறது. இப்போது சின்னம், கொடியை வரையுங்கள். வருகிற ஆகஸ்ட்-17- மாநாடு திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. அடுத்தடுத்து தென்மாவட்டங்களில் மாநாடு நடைபெற்று மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.

வருகிற 2025, ஆகஸ்ட் 17-ஆம் தேதி திருநெல்வேலியிலும், 2025 செப்டம்பர் 13-ம் தேதி மதுரையிலும், 2025 அக்டோபர் 26ம் தேதி கோவையிலும், 2025 நவம்பர் 23-ஆம் தேதி சேலத்திலும், 2025 டிசம்பர் 21-ம் தேதி தஞ்சாவூரிலும், அடுத்த ஆண்டு 2026 ஜனவரி 4-ம் தேதி திருவண்ணாமலையிலும், 2026 ஜனவரி 24-ஆம் தேதி திருவள்ளூரிலும் மாநாடு நடைபெற இருக்கிறது.

அதிமுக பாஜக கூட்டணி – வாக்கு சதவீதம் எப்படி?

விஜய் வருகை மற்றும் நாம் தமிழர் கட்சி வாக்குகள் பாஜகவிற்கு சவாலான ஒன்று. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான சாத்தியமான கணிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சாதகங்கள்‌ பட்டியலில், திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை, அதிமுக-பாஜக கூட்டணி, வைப்புத்தொகுப்பு மூலமாக வங்கி சேவை பெறுபவர்கள், . முதல் முறை வாக்காளர்கள் (புதிய வாக்காளர்கள்), தேசிய உணர்வு, ஆய்வுகள், ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கிடைக்கும் வாக்குகள் என மொத்தம் 20 சதவீதத்திற்கும் அதிகம். அதேபோல் , விஜய் கட்சியின் தாக்கம், நாம் தமிழர் வாக்கு வங்கி, மத்திய அரசுக்கு எதிரான மனநிலை மொத்தம் என 10 வாக்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.