இறுதிகட்டத்தில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: அமித் ஷா, ராகுல் காந்தி இன்று வருகை.. பரபரப்பாகும் அரசியல் களம்

Puducherry Assembly Election : புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில் இறுதி கட்ட பரப்புரை மேற்கொள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரி வரவிருக்கின்றனர். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இறுதிகட்டத்தில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: அமித் ஷா, ராகுல் காந்தி இன்று வருகை.. பரபரப்பாகும் அரசியல் களம்

அமித் ஷா - ராகுல் காந்தி

Updated On: 

06 Apr 2026 11:18 AM

 IST

புதுச்சேரி, ஏப்ரல் 9 : புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஏப்ரல் 6, 2026 அன்று புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். புதுச்சேரியில் ஏப்ரல் 9, 2026 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 7, 2026 அன்றுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனையடுத்து இறுதி கட்ட பிரச்சாரத்திற்காக தேசிய முற்போக்கு கூட்டணி மற்றும் திமுக கூட்டணியை சேர்ந்த தேசிய தலைவர்கள் புதுச்சேரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாத்துக்காக புதுச்சேரிக்கு அமித் ஷா மற்றும் ராகுல் காந்தி வருகை

அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஏப்ரல் 6, 2026 அன்று சென்னை வரவுள்ளனர். அவர்கள் அங்கிருந்து ஹெலிஹாப்டர்கள் மூலம் புதுச்சேரி சென்று தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். புதுச்சேரியில் ஏப்ரல் 7, 2026 அன்றுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் தங்கள் கடைசி கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

இதையும் படிக்க : காங்கிரஸை முதல் முறை கடுமையாக விமர்சித்த விஜய்… என்ன சொன்னார் தெரியுமா?

இதற்காக என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷா ஏப்ரல் 6, 2026 அன்று பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து ஏப்ரல் 6, 2026 அன்று மாலை 3.15 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வரும் அமித் ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு செல்லவிருக்கிறார். அங்கு மாலை 5 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர் பின்னர் மாலை 6.10 மணிக்கு மீண்டும் சென்னை திரும்பும் அவர் விமான நிலையத்தில் மாநில பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. பின் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்லவிருக்கிரார்.

மற்றொரு பக்கம் காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வரும் ராகுல் காந்தி அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். பின்னர் அங்கிருந்து 12 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய சிறிய ரக விமானத்தில் புதுச்சேரி சென்று பரப்புரையில் பங்கேற்கவுள்ளார். 2 தேசிய தலைவர்களும் ஒரே நேரத்தில் புதுச்சேரி வரவிருப்பதால் புதுச்சேரிில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சட்டமன்ற தேர்தல்… புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 5 நாள்கள் தொடர் விடுமுறை!

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறவுள்ளது. அங்கு என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கவிருக்கின்றன. இதனையடுத்து அமித் ஷா மற்றும் ராகுல் காந்தியின் வருகையால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ன

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்