ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் திடீர் மாற்றம் – மனு தாக்கல் செய்யும் ஆர்.காந்தி

DMK Changes Ranipet Candidate: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நிலையில் ஏப்ரல் 6, 2026 அன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் திடீர் மாற்றம் - மனு தாக்கல் செய்யும் ஆர்.காந்தி

ஆர்.காந்தி

Updated On: 

06 Apr 2026 07:54 AM

 IST

சென்னை, ஏப்ரல் 6 :  ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த தொகுதியில் போட்டியிட அமைச்சர் ஆர்.காந்தி ஏப்ரல் 6, 2026 அன்று  வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக அக்கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுதவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்

இந்த நிலையில் தான் ராணிப்பேட்டை தொகுதியின் வேட்பாளராக அமைச்சர் ஆர்.காந்தியின் மகன் வினோத் காந்திக்கு சீட் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆர். காந்தி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.  தற்போது அமைச்சர் ஆர்.காந்திக்கு 80 வயது ஆகும் நிலையில், அவரது வயதைக் காரணம் காட்டி அவரது மகனுக்கு திமுக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்புகிறது. இது ஆர்.காந்திக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : விஜய்யின் மனதில் பாஜக இருக்கிறது.. அதனால் எங்கள் வேட்பாளரின் பெயரை கூறினார் – குஷ்பு பதில்

இதனையடுத்து திமுக தலைமையிடம் தனக்கு சீட் கேட்டு தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இதனால் அவரது மகன் வினோத் காந்தியால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது கட்சியின் சார்பில் வழங்கப்படும் பி பார்ம் தற்போது அமைச்சர் ஆர்.காந்தியிடம் வழஹ்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஏப்ரல் 6, 2026 அன்று ராணிப்பேட்டை தொகுதிக்கு ஆர்.காந்தி மனு தாக்கல் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ராணிப்பேட்டை தொகுதி முழுவதும் திமுக வேட்பாளர் ஆர்.காந்தி என சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 6, 2026 அன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் கடைசி நேரத்தில் திமுக வேட்பாளர் மாற்றப்பட்டிருப்பது பரபரபப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராணிப்பேட்டை தொகுதியில் கடந்த 1996, 2006, 2016, 2026 ஆகிய தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு ஆர்.காந்தி வெற்றிபெற்றிருக்கிறார். அவர் தற்போது திமுக அமைச்சரவையில்  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : மதுரை மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு – யார் இந்த விஸ்வநாதன்? வெளியான விவரம்

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. திமுகவில் இருந்து ஒதுக்கப்பட்ட 8 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கடந்த மார்ச் 29,  2026 அன்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.  மேலும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் தான் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அவர் பின் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்