கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை.. பிரேமலதா விஜயகாந்த் பளிச் பேட்டி..
Premalatha Vijayakanth On Alliance: அதிகாரபூர்வமாக கூட்டணி பற்றி தேமுதிக யாரிடமும் பேசவில்லை இதுதான் உண்மை எங்களின் கட்சி வளர்ச்சியை மட்டுமே நாங்கள் முன்னிறுத்தி வருகின்றோம். மாநாடு நெருங்கும்போது கூட்டணி பேச்சு வார்த்தைகள் வரும் அதை உறுதி செய்யப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
மதுரை, நவம்பர் 16, 2025: தேமுதிக தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை யாரிடமும் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை என மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தேர்தல் குழு, உயர்மட்ட குழு, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மிக முக்கியமாக இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் எப்படி கூட்டணி அமைக்கலாம், மாவட்டங்களில் என்ன மாதிரியான நிலை காணப்படுகிறது என்பது குறித்து விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால், இம்முறை கூட்டணி அமைப்பதில் உறுதியான முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றி பெறும்:
இந்தநிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த, “ 2026 உறுதியாக தமிழகத்தில் கூட்டணி மந்திரி சபை அமையும் என சொல்கிறார்கள். அதற்காக நமது கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என பேசி வருகின்றேன். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றி பெறும் என்பதை நாங்கள் உறுதியாக சொல்கின்றோம்.
மேலும் படிக்க: ஆந்திராவுக்கு சென்ற தென் கொரிய நிறுவனம்.. விலாசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி..
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பார்த்தோம் மிக பிரம்மாண்டமான வெற்றியை பெற்றுள்ளனர். இந்த அளவு பிரமாண்ட வெற்றியை பெறுவார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. பாஜக கூட்டணியில் நிதீஷ் குமார் அவர்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த வெற்றி பாரத பிரதமர் மோடிக்கும் அமித்ஷா உள்ளிட்ட அனைவருக்கும் பங்கு உண்டு. ஒரு தேர்தலில் வெற்றி வரும் ஒரு தேர்தல் தேர்தல் தோல்வி வரும் ஆகையால் இதுதான் யாருக்கும் நிரந்தரம் என்று சொல்ல முடியாது தவறான வார்த்தைகளையும் பயன்படுத்த முடியாது.
விஜய் களத்துக்கு வர வேண்டும்:
விஜய் பற்றி சொல்ல வேண்டுமானால் விஜய் களத்துக்கு வர வேண்டும். இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டும் எங்களுடைய பதில் விஜய் பற்றி எது எங்களிடம் கேட்டாலும் அதைப்பற்றி நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். இதுதான் நீங்கள் பதிலாக இருக்கும்.
மேலும் படிக்க: முட்டை விலை இதுவரை காணாத புதிய உச்சம் – 50 ஆண்டுகால வரலாற்றில் இதுவே அதிகம் – காரணம் என்ன?
அவங்க கருத்துக்களை அவங்க பதிய வைக்கட்டும் ஆனால் அவங்க பேச மாட்டார்கள் ஆகையால் அவர்களை பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை. பாஜக எல்லோரிடமும் கூட்டணி பற்றி பேசுகிறார்கள் உங்களிடம் பேசினார்களா என்ற கேள்விக்கு.
கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை:
எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் தேர்தல் காண முன் பணிகளை செய்து வருகிறோம். மாநாடு காண பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியும் தோழமை கட்சி தான். அதிகாரபூர்வமாக கூட்டணி பற்றி தேமுதிக யாரிடமும் பேசவில்லை இதுதான் உண்மை எங்களின் கட்சி வளர்ச்சியை மட்டுமே நாங்கள் முன்னிறுத்தி வருகின்றோம். மாநாடு நெருங்கும்போது கூட்டணி பேச்சு வார்த்தைகள் வரும் அதை உறுதி செய்யப்படும் செய்தியாளர்களை அழைத்து அதை உறுதிப்படுத்துவோம்.