5 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

CPM Candidate List: இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நீண்ட இழுபறிக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் ஆறு தொகுதிகள் வழங்கப்படாத நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

கோப்பு புகைப்படம்

Published: 

30 Mar 2026 22:46 PM

 IST

சென்னை, மார்ச் 30, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணியை எடுத்துக்கொண்டால், தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நீண்ட இழுபறிக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் ஆறு தொகுதிகள் வழங்கப்படாத நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 500 சவரன் நகை, சொகுசு கார்கள், ரூ. 1 கோடி வைரம்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கோரியிருந்தாலும், இறுதியில் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர் பட்டியல் வெளியீடு:

அதன்படி, தற்போது அந்த 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது:

  • பழனி – எண். பாண்டி
  • கந்தர்வகோட்டை – எம். சின்னதுரை
  • பத்மநாபபுரம் – ஆர். செல்லசுவாமி
  • திருவொற்றியூர் – சுந்தரராஜன்
  • கீழ்வேளூர் – டி. லதா

இந்த பட்டியல் மூலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..