திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் – நெல்லை கூட்டத்தில் அமித்ஷா பேச்சு..

Amit Shah On DMK: நெல்லை மாவட்டத்தில் பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துக்கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். திமுகவின் ஊழல் பட்டியல் நீளமாக உள்ளது” என பேசியுள்ளார்.

திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் - நெல்லை கூட்டத்தில் அமித்ஷா பேச்சு..

அமித்ஷா

Updated On: 

22 Aug 2025 19:43 PM

நெல்லை, ஆகஸ்ட் 22, 2025: நெல்லை மாவட்டத்தில் பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், “திமுக அரசை வேரோடு பிடுங்கி எரிய வேண்டும். ஊழல் நிறைந்த கட்சி என்றால் அது திமுக தான். உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவது மட்டுமே திமுகவின் ஒரே இலட்சியம்” என குறிப்பிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஏழு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சியான அதிமுக மும்முரமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவும் தேர்தலை நோக்கி நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்தலை சந்திக்க ஆயத்தமாகும் பாஜக:

அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பூத் கமிட்டி ஏஜென்ட்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தேசிய பொதுச் செயலாளர் பி. எல். சந்தோஷ் தலைமையிலும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 22, 2025 அன்று நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் பூத் கமிட்டி ஏஜென்ட்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழ் மண்ணை வணங்கி என் உரையை தொடங்குகிறேன். தமிழில் பேச முடியவில்லை என்பதில் வருந்துகிறேன். தமிழ் மண்ணைச் சேர்ந்த சி.பி ராதாகிருஷ்ணனை துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அடுத்த மாநிலங்களவைத் தேர்தலில் அவர் சபாநாயகராக இருப்பார்.

Also Read: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் பொறுப்பு பாஜகவிற்கு உள்ளது – அண்ணாமலை..

தமிழக மக்கள் மீது தீரா பற்று கொண்டவர் பிரதமர்:

பிரதமர் நரேந்திர மோடி தமிழக மண்ணையும் மக்களையும் எப்போதும் உணர்ந்தவர்; தீரா பற்று கொண்டவர். தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமை ஜனாதிபதி என்ற உயரிய பதவியில் அமர்த்தி பாஜக பெருமை சேர்த்தது.

பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குற்றவழக்கில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீடிக்கக் கூடாது என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்தச் சட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்த்தார். செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் சிறை சென்றபோதும் பதவியில் நீடித்தனர்.

Also Read: ”விஜய் எங்களுக்கு தம்பி, இந்த உறவு இப்போது உருவானது அல்ல” – பிரேமலதா விஜயகாந்த்..

2026 தேர்தலி கூட்டணி ஆட்சி அமையும்:


கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 18 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றது. அதேபோல், கூட்டணிக் கட்சியான அதிமுக 21 சதவீத வாக்குகளை பெற்றது. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியே ஆட்சியில் அமையும். இந்த கூட்டணி தமிழக மக்களை மேம்படுத்தும்.

தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்:

தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். திமுகவின் ஊழல் பட்டியல் நீளமாக உள்ளது – டாஸ்மாக், போக்குவரத்து, கனிம வளம் என அனைத்துத் துறைகளிலும் ஊழல் செய்து வருகிறது. உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பதே திமுகவின் ஒரே இலட்சியம். அதேபோல, சோனியா காந்திக்கு அவரது மகன் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே ஒரே இலட்சியம். ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்” என அமித்ஷா தெரிவித்தார்.