Tamil Nadu Election 2026 Results LIVE: தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? தேர்தல் முடிவுகள் இன்று!
Tamil Nadu, Kerala, West Bengal, Assam, Puducherry Assembly Election 2026 Results Live Online: இந்தியாவே தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி வரும் நிலையில் இன்று பலரின் கேள்விகளுக்கு விடை தெரிந்துவிடும். தமிழ்நாட்டை அடுத்து ஆளப்பொவது யார் என்பதை தீர்மானிக்கும் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. தமிழ்நாடு தேர்தல் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் இங்கே தெரிந்துகொள்ளவும்

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்
LIVE NEWS & UPDATES
-
Tamil Nadu Assembly Election : வாக்களித்தவர்கள் எத்தனை பேர்?
இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழகத்தில் இம்முறை வாக்குப்பதிவு மிகத் தீவிரமாக நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு பின்னர் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,73,43,291 ஆக இருந்தது. இதில் வாக்களித்தவர்கள் 4,87,98,833 பேர் ஆவார்கள். அதாவது சுமார் 85.10% ஆகும். இதில், வாக்களிக்காதவர்கள் 85,44,458 பேர் ஆவர்.
-
Tamil Nadu Assembly Election 2026 Results : பலத்த பாதுகாப்பு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
-
அடுத்து யார்? இன்று தெரியும்
தமிழகமே பெருமளவில் எதிர்பார்த்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன. அதன்படி, தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டு கால எதிர்காலம் எந்த கட்சியின் வசம் செல்ல போகிறது என்பதும் தெரியவரும்.
-
முழு தகவல் இரவுக்குள் தெரியவரும்
எந்த கட்சி ஆட்சி அமைக்கும், எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும், எவ்வளவு வாக்கு சதவீதம் பெறும். இதற்கு அடுத்தடுத்த நிலைகளில் எந்தெந்த கட்சிகள் வரும் என்பது குறித்த முழு தகவல் இரவுக்குள் தெரியவரும்
-
தொகுதிகள் வாரியாக கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்
சுமார் 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டு தொகுதிகள் வாரியாக கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த பணிகள் சுமார் இரவு வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
-
Tamil Nadu Assembly Election 2026 Results : காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. இதில், இன்று திங்கள்கிழமை மே 4- ஆம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்க உள்ளன.
-
Tamil Nadu Assembly Election 2026 : 4 முனை போட்டி
சுமார் 40 நாட்கள் வரை தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்தது. 4 முனை போட்டி நிலவிய நிலையில் ஏப்ரல் 23ம் தேதி தீவிரமான வாக்குப்பதிவு நடபெற்றது
-
Tamil Nadu Election 2026 : மார்ச் 15 முதல் தீவிரமடைந்த அரசியல்களம்
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி அரசின் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி, கடந்த மார்ச் 15- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அரசியல் களம் சூடுபிடித்தது
-
Tamil Nadu Election 2026 Results : இன்று தேர்தல் முடிவுகள்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதில், எந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டு கால எதிர்காலம் யார் கையில் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தும்.
Tamil Nadu Election 2026 Results : தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்தது. அரசியல் தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை, பரப்புரை என பம்பரமாய் சுழன்றார்கள். பின்னர் ஏபர்ல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வழக்கத்தைவிட அதிக விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இது பல யூகங்களுக்கு வழி வகுத்தது. இந்நிலையில், 2026ன் வாக்கு எண்ணிக்கை மே 4ல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான வாக்குப்பதிவைத் தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்த முடிவுகளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். அதுவும் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த முறை விஜய்யின் அரசியல் வருகையால், தமிழக தேர்தல் களம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அளவு காணப்படுகிறது. மேலும் எக்சிட் போல் வெளியாகி பல குழப்பங்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இன்று அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்துவிடும். வாக்கு எண்ணிக்கை மே.4 காலை 8.00 மணிக்கு, தபால் வாக்குகள் எண்ணுவதுடன் தொடங்க உள்ளது. இன்று மாலைக்குள் தமிழ்நாட்டை ஆளப்போவது யார் என்பது முடிவாகிவிடும். தமிழ்நாடு தேர்தல் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் இங்கே தெரிந்துகொள்ளவும்