3 ஆண்டுகளில் இந்திய கிரியேட்டர்களுக்கு ரூ.21,000 கோடி – யூடியூப் சிஇஓ அதிரடி தகவல் !

Youtube spends 21,000 crore for creators : மும்பையில் நடைபெற்ற WAVES 2025 மாநாட்டில் உரையாற்றிய யூடியூப் தலைமை செயல் அதிகாரி நீல் மோகன், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய கிரியேட்டர்கள், கலைஞர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு ரூ. 21,000 கோடிக்கு மேல் யூடியூப் ஊதியம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகளில் இந்திய கிரியேட்டர்களுக்கு ரூ.21,000 கோடி - யூடியூப் சிஇஓ அதிரடி தகவல் !

யூடியூப்

Published: 

02 May 2025 16:21 PM

இந்தியாவில் இப்போது பிரபலமான தளமாக யூடியூப் (Youtube) இருந்து வருகிறது. ஆரம்பத்தில் வெறும் வீடியோ பார்க்கும் ஒரு தளமாக இருந்து வந்த யூடியூப், தற்போது தொழில், வருமானம், புகழ் மற்றும் தொழில் முனைவோர்களை உருவாக்கும் ஒரு பன்முக தளமாக மாறியிருக்கிறது. இதன் மூலம் கிரியேட்டர்கள் (Creators) மற்றும் இன்ஃப்ளூயன்சர்கள் என குறைந்த முதலீட்டில் மில்லியன் ஃபாலோயர்கள், லட்சக்கணக்கில் வருமானம் என சுய தொழில் வாய்ப்பை பெற்று வருகின்றனர். அதிகரித்திருக்கும் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்பாடு போன்றவை இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பாடல்கள், திரைப்பட காட்சிகள், திரைப்பட விமர்சனங்கள், கலை, சமையல், அரசியல், செய்தி, கல்வி என அனைத்து துறைகளிலும் தகவல்களை பெற ஆதாரமாய் யூடியூப் விளங்குகிறது.

இந்தியாவில் டிஜிட்டல் மார்கெட் அசூர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் யூடியூப் இந்திய கிரியேட்டர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.21,000 கோடி அளித்துள்ளதாக யூடியூப் சிஇஓ நீல் மோகன் மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ (World Audio Visual and Entertainment Summit) மாநாட்டில் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, இந்திய கிரியேட்டர்கள், கலைஞர்கள், மற்றும் மீடியா நிறுவனங்கள் உருவாக்கிய வீடியோக்கள், உலகளாவிய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை வரவேற்பை வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 45 பில்லியன் மணி நேரம் வியூஸ்களை பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார்.

2 ஆண்டுகளில் ரூ. 850 கோடி முதலீடு

இன்னும் வரும் 2 ஆண்டுகளில், இந்திய கிரியேட்டர்கள் மற்றும் மீடியா நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஊக்கப்படுத்தும் வகையில் யூடியூப் நிறுவனம் ரூ.850 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இது வெறும் எண்ணிக்கைகளை அதிகப்படுத்த மட்டுமல்ல, பல ஆயிரம் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நம்பிக்கையுடன் செய்யப்படும் முதலீடு. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து 10 கோடிக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் வீடியோக்களை பதிவேற்றியுள்ளன. இதில் 15,000 சேனல்கள் 10 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கடந்துள்ளன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் இது வேகமான வளர்ச்சியைக் காட்டுகிறது.

இந்திய கிரியேட்டர்களின் தனித்துவம்

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே, இந்தியா முழுவதும் உள்ள கிரியேட்டர்கள், கலைஞர்கள் மற்றும் மீடியா நிறுவனங்களுக்கு ரூ.21,000 கோடிக்கு மேல் யூடியூப் நிறுவனம் பணம் வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.  இந்திய கிரியேட்டர்கள் இந்தியாவின் தனித்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றனர். வரலாறு, கலாசாரம் மற்றும் தங்களின் திறமைகள் ஆகியவற்றை உலகின் எல்லா மூலைகளிலும் உள்ள பார்வையாளர்களுடன் பகிரும் திறமை அவர்களிடம் உள்ளது.

பிரதமர் மோடி முதலிடம்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா இன்று உலக கிரியேட்டர்களுக்கு ஒரு முன்னோடியாக உருவெடுத்துள்ளது. இது அவருடைய டிஜிட்டல் ஆளுமையை நிரூபிக்கிறது. யூடியூபில் 2.5 கோடி சப்கிரைபர்ஸ்களைக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மற்ற உலக நாடுகளின் தலைவர்களை விட அதிகமான யூடியூப் சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ளார் என்று பேசினார்.