டிச.31-க்குள் பான் – ஆதாரை இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Link PAN and Aadhaar Card | இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமாக உள்ள இரண்டு ஆவணங்கள் தான் பான் மற்றும் ஆதார் கார்டு. இந்த நிலையில், டிசம்பர் 31, 2025-க்குள் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு முடக்கப்படும் அபாயம் உள்ளது.

டிச.31-க்குள் பான் - ஆதாரை இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

31 Dec 2025 13:59 PM

 IST

இந்தியாவில் உள்ள குடிமக்கள் சில வேலைகளை செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு சில ஆவணங்கள் மிக முக்கியமானவையாக உள்ளன. குறிப்பாக ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card), வாக்காளர் அடையாள (Voter ID) அட்டை ஆகியவை கட்டாயமாக உள்ளன. இவை இல்லையென்றால் பல வேலைகளை செய்ய முடியாமல் போய்விடும். அந்த வகையில், இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக உள்ளது தான் பான் கார்டு. பான் கார்டு இல்லை என்றால் பண பரிவர்த்தனை, வங்கி கடன், வருமான வரி தாக்கல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாது. இத்தகைய முக்கிய ஆவணமாக பான் கார்டு உள்ள நிலையில், இந்த ஒரு விஷயத்தை செய்யவில்லை என்றால் 2026 முதல் உங்களது பான் கார்டு முடக்கப்படும் அபாயம் உள்ளது.

பான் – ஆதார் இணைப்பு கட்டாயம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பான் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை இணைப்பது கட்டாயம் என வருமான வரித்துறை (Income Tax Department) அறிவித்தது. இதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஏப்ரல் 3, 2025 அன்று வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது, டிசம்பர் 31, 2025-க்குள் அனைவரும் தங்களது பான் மற்றும் ஆதார் கார்டை இணைத்திருக்க வேண்டும் என்று கூறியது. அக்டோபர் 01, 2024-க்கு முன்னதாக ஆதார் கார்டு பெற்ற அனைவருக்கும் இது பொருந்தும் என்றும் கூறியிருந்தது.

இதையும் படிங்க : ரூ.18-ல் இருந்து ரூ.72-க்கு உயரும் சிகரெட் விலை?.. புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை திருத்தும் அரசு

இதுவரை வழங்கப்பட்ட கால அவகாசம் மற்றும் அபராதங்கள்

முன்னதாக பான் மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30, 2023 ஆக இருந்தது. பின்னர் அது மே 31, 2024 ஆக நீட்டிக்கப்பட்டது. அதற்கு தாமத கட்டணம் ரூ.1,000 விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது டிசம்பர் 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கும் நபர்கள் எந்த வித அபராதமும் செலுத்த தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : EPFO : பணியில் இருந்து விலகினாலும் பிஎஃப் கணக்குக்கு வட்டி வழங்கப்படுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

பான்  – ஆதாரை இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

டிசம்பர் 31, 2025-க்குள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் ஜனவரி 1, 2025 முதல் பான் கார்டு முடக்கப்படும். இதன் மூலம் பண பரிவர்த்தனை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறாக பயன்படுத்தப்படும் ‘ஆன்டிபயாடிக்’.. வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல் என எச்சரிக்கும் மருத்துவர்கள்..
2025 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.. விரிவாக பார்க்கலாம்..
விஜய்யை காண கூடிய ரசிகர்கள்.. கூட்டநெரிசலில் தடுமாறி விழுந்த விஜய்..
பாலிவுட், டாலிவுட் மற்றும் இந்திய கிரிக்கெட்.. சல்மான்கான் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல்..