UPI : இனி ஒரே நாளில் யுபிஐ மூலம் ரூ.10 லட்சம் வரை பண பரிவர்த்தனை செய்யலாம்.. வந்தது அதிரடி மாற்றங்கள்!

UPI Transaction Limits Increased | பயனர்களின் நலனுக்காக யுபிஐ-ல் அவ்வப்போது பல புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் தற்போது யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வரம்புகளில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

UPI : இனி ஒரே நாளில் யுபிஐ மூலம் ரூ.10 லட்சம் வரை பண பரிவர்த்தனை செய்யலாம்.. வந்தது அதிரடி மாற்றங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 Sep 2025 12:24 PM

 IST

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகளை பயன்படுத்தி வரும் நிலையில், அதில் அவ்வப்போது சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் தற்போது சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, யுபிஐ மூலம் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளுக்கான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மிகுந்த பலனளிக்கும் இந்த முக்கிய மாற்றங்கள் இன்று (செப்டம்பர் 15, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், யுபிஐ-ல் வந்துள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் யுபிஐ சேவை

இந்தியா முழுவதும் மிக பரவலாக யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, இந்தியாவின் பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை பயன்பாட்டில் உள்ளது. இதேபோல பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக் கடைகள் வரையிலும் யுபிஐ பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பொதுமக்களின் வாழ்வில் யுபிஐ ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்ட நிலையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation of India) அதன் வரம்பை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : ITR Filing : கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாமா?.. வல்லுநர்கள் கூறுவது என்ன?

யுபிஐ-ல் வந்துள்ள முக்கிய மாற்றங்கள்

யுபிஐ-ல் இன்று (செப்டம்பர் 15, 2025) முதல் வந்துள்ள முக்கிய பண பரிவர்த்தனை வரம்பு மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தனிநபர், வணிகம் சார்ந்த பண பரிவர்த்தனை

தனிநபர் மற்றும் வணிகம் சார்ந்து யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கான வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் காப்பீட்டு பிரீமியம், பயண முன்பதிவு, மூலதன சந்தையில் முதலீடு செய்வது ஆகியவற்றுக்கு யுபிஐ மூலம் ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்றும், 24 மணி நேரத்தில் ரூ.10 லட்சம் வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மொபைல் ஆப்களில் கடன் பெறுவது உண்மையில் பாதுகாப்பானதா? – கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

கிரெடிட் கார்டு கட்டணம்

யுபிஐ மூலம் செலுத்தப்படும் கிரெடிட் கார்டு கட்டணங்களுக்கான வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, கடன் மற்றும் மாத தவணை செலுத்துவதற்கான வரம்பு ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

யுபிஐ மூலம் நகை வாங்குதல்

யுபிஐ மூலம் நகை வாங்குவதற்கு ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் யுபிஐ பண பரிவர்த்தபை செய்ய முடியும் என்றும் 24 மணி நேரத்தில் ரூ.6 லட்சம் வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

வங்கி இருப்பு மற்றும் தனிநபர் வரம்பு

இறுதியாக வங்கி கணக்கில் இருப்பு வைப்பதற்கு ரூ.5 லட்சம் வரை யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும், தனிநபர்களுக்கு பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு ரூ.1 லட்சமாகவே தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.