இந்த காரணங்களுக்காக லைஃப் இன்சூரன்ஸ் கோரிக்கை நிராகரிக்கப்படலாம்! தவிர்ப்பது எப்படி?

: Life Insurance Rejections,: குடும்பத்தில் ஒருவர் குறிப்பாக குடும்பத் தலைவர் இறந்துபோனால் , குடும்பத்துக்கு லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. இந்த நிலையில் சில காரணங்களால் நம் லைஃப் இன்சூரன்ஸ் கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்த காரணங்களுக்காக லைஃப் இன்சூரன்ஸ் கோரிக்கை நிராகரிக்கப்படலாம்! தவிர்ப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

13 Sep 2025 17:14 PM

 IST

லைஃப் இன்சூரன்ஸ் (Life Insurance) என்பது குடும்பத்தாருக்கு எதிர்பாராத மரணம் ஏற்பட்டால் நிதி பாதுகாப்பை அளிக்க பயன்படும் முக்கிய கருவி. ஆனால், பலர் இந்த நேரத்தில் காப்பீட்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவது போன்ற சிக்கல்களை சந்திக்கின்றனர். இதன் காரணங்களை அறிந்து கொள்வது எதிர்காலத்தில் குடும்பத்தினர் சிரமமின்றி இழப்பீடு பெறலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக லைஃப் இன்சூரன்ஸ் என்பது குடும்ப தலைவர் இறந்தால், ஒரு பெரிய தொகை இழப்பீடாக வழங்கப்படும். இதற்காக மாதம் அல்லது ஆண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வர வேண்டும். இந்த நிலையில் சில நேரங்களில் நம் லைஃப் இன்சூரன்ஸ் கோரிக்கை நிராகரிக்கப்படலாம். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

லைஃப் இன்சூரன்ஸ் நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?

இது குறித்து கோ டிஜிட் லைஃப் இன்சூரன் நிறுவனத்தின் இழப்பீடு வழங்கும் பிரிவின் தலைவர் ராஜா தன்வார் தெரிவித்ததாவது, லைஃப் இன்சூரன்ஸ் கோரிக்கைகள் பெருமபாலும் சில முக்கிய காரணங்களால் நிராகரிக்கப்படலாம்.

முழுமையற்ற அல்லது தவறான தகவல்

நம் உடல் நிலை, நாம் எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகள், புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் போன்றவை குறித்து நம் விண்ணப்பத்தில் மறைக்கப்பட்டால், கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம்.

இதையும் படிக்க : ஓய்வு காலத்துக்கு திட்டமிடுகிறீர்களா? இந்த 8 விதிகளை கருத்தில் கொள்ளுங்கள்!

மருத்துவ வரலாறு தெரிவிக்காதது

நீண்ட நாள் நோய்கள், மரபணு நோய்கள் போன்றவை நம் விண்ணப்பத்தில் தெரிவிக்கவில்லை என்றால் காப்பீடு நிறுவனங்கள் நம் கோரிக்கையை நிராகரிக்கலாம்.

தவணை தொகை செலுத்தாமல் இருப்பது

பிரீமியம் தொகையை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால், காப்பீடு நிறுத்தப்படும். அந்த நேரத்தில் நாம் குறிப்பிட்ட தொகை செலுத்தியிருந்தால் தான் நம் கோரிக்கை ஏற்கப்படும். இது நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும்.

காப்பீடுகளை மறைத்தல்

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீடுகளை எடுத்திருந்தால், அத குறித்து காப்பீடு நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் இல்லையென்றால் காப்பீடு நிறுவனங்கள் நம் கோரிக்கையை நிராகரிக்க அதற்கு உரிமை உண்டு.

இதையும் படிக்க : இந்தியாவில் உள்ள கார் இன்சூரன்ஸ் வகைகள் என்ன? சிறந்ததை தேர்ந்தெடுப்பது எப்படி?

கோரிக்கை நிராகரிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

  • நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துப்படி காப்பீடு ஒப்பந்தங்கள் உண்மைத் தன்மையை அடிப்படையாக வைத்து இயங்குகின்றன. அதாவது காப்பீடு பெறுபவர் முழு நேர்மையாக இருக்க வேண்டும்.
  • உடல்நிலை, தொழில் பழக்க வழக்கங்கள், ஏற்கனவே உள்ள காப்பீடு போன்ற அனைத்தையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
  • காப்பீடு எடுப்பதற்கு முன் விதிமுறைகளை முழுமையாக படிக்கவும். அதற்கு ஏற்ப நடந்துகொள்வது காப்பீடு நிராகரிக்கப்படாமல் தடுக்க முடியும்.
  • சரியான நேரத்தில் தவணையை செலுத்த வேண்டும். இல்லையெனில் இன்சூரன்ஸ் எப்போது வேண்டுமானாலும் செயலிழக்கலாம்.
  • உடல் நிலை, முகவரி, நாமினி மாற்றங்கள் போன்றவற்றை உடனடியாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.