கடனே வாங்க வேண்டாம்.. இந்த 4 விஷயங்களை மட்டும் ஃபாலோ பண்ணா போதும்!
Tips for Financial Freedom | பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு நிதி தேவை ஏற்படும்போது கடன் வாங்குகின்றனர். ஆனால், கடனே வாங்காமல் இருக்க சில வழிகள் உள்ளன. அந்த வழிகள் என்ன, அதனை பின்பற்றுவதன் மூலம் கடனை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
மனிதர்களின் வாழ்க்கை பணத்தை மையப்படுத்தியதாக உள்ளது. உணவு, உடை, இருப்பிடம் என மனிதர்களின் அனைத்து தேவைகளுக்கும் பணம் அடிப்படை ஆதாரமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது பொருளாதாரத்தை பாதுகாப்பதும், அதனை மேம்படுத்துவதும் கட்டாயமாக உள்ளது. ஒருவேளை போதுமான பொருளாதாரம் இல்லை என்றாலோ அல்லது நிதி சிக்கல்கள் ஏற்பட்டாலோ பெரும்பாலான பொதுமக்கள் கடன் வாங்க முடிவு செய்கின்றனர். இந்த நிலையில், கடன் வாங்காமல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பட்ஜெட்
நிதி மேலான்மைக்கு முக்கியமே பட்ஜெட் (Budget) தான். பட்ஜெட் இல்லாமல் செலவு செய்வது தேவையற்ற நிதி சிக்கல்களை ஏற்படுத்திவிடும். எனவே செலவு செய்வதற்கு முன்னதாக அதற்கான பட்ஜெட்டை மதிப்பிடுவது நிதி பாதுகாப்பை வலுப்படுத்தும் சிறப்பு அம்சமாகும். பட்ஜெட் போடும்போது தேவையற்ற விஷயங்களை நீக்க முடியும். இதன் மூலம் கூடுதலாக ஏற்படும் செலவுகளை தவிர்க்க முடியும்.
இதையும் படிங்க : UPI : யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்கிறீர்களா?.. வருகிறது புதிய ரூல்ஸ்.. என்ன தெரியுமா?
சிக்கனம்
சிக்கனம் என்ற வார்த்தையை பலரும் தவறாக புரிந்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், சிக்கனம் என்பது பொருளாதாரத்தை பாதுகாக்க உதவும் முக்கிய அம்சமாகும். உதாரணமாக ஒரு குடும்பம் உள்ளது என்றால், அந்த குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை பட்டியலிட்டு அதற்கு ஏற்ப பொருட்களை வாங்குவது தேவையற்ற பண செலவை குறைக்க உதவும்.
வருமானத்தை அதிகரிக்க வேண்டும்
பெரும்பாலானவர்கள் குறைந்த ஊதியம் வாங்கினாலும் ஒரு வேலையை மட்டுமே செய்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் நிதி தேவை மேலும் மேலும் அதிகரிக்கும். ஒவ்வொருவரும் தங்களது பணி ஊதியத்தை தாண்டி கூடுதல் ஊதியத்திற்காக (Passive Income) ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டியது அவசியமாகிறது. எனவே வருமானத்தை அதிகரிக்கும்போது நிதி தேவைகள் தீர்கப்படும்.
இதையும் படிங்க : GSB : 338 சதவீதம் லாபம் தந்த தங்க பத்திரம்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!
சேமிப்பு மற்றும் முதலீடு
பெரும்பாலான மக்கள் நேரம், காலம் பார்க்காமல் மிக கடுமையாக உழைத்து பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், அவர்கள் ஒரு பெரிய தவறை செய்து விடுகின்றனர். அதுதான் சேமிப்பு, முதலீடு செய்யாமல் இருப்பது. பணத்தை சம்பாதித்த பிறகு அது மிக சுலபமாக செலவாகிவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பணத்தை பாதுகாக்க வேண்டும் அல்லது அதனை பல மடங்காக உயர்ந்த வேண்டும் என்றால் அதற்கு சேமிப்பு அல்லது முதலீடு கட்டாயமாக உள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்த முறைகளை பின்பற்றி பொருளாதாரத்தை கட்டமைக்கும் பட்சத்தில் கடன் வாங்க வேண்டிய தேவை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.