மார்ச் மாதத்தில் FD வட்டி விகிதங்களை மாற்றி அமைத்த முக்கிய வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
Fixed Deposit Schemes Interest Rates Changed | இந்தியாவில் பல வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 2026 மார்ச் மாதத்தில் சில வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது.

மாதிரி புகைப்படம்
சம்பாதிக்கும் பணத்தை பாதுகாத்து நிதி மேலாண்மை மேற்கொள்ள வேண்டும், பல மடங்காக உயர்த்த வேண்டும் என்றால் முதலீடு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. அவ்வாறு பணத்தை பட மடங்காக உயர்த்த பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் சில சிக்கல்களும் உள்ளன. இதன் காரணமாக பலரும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்வர். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்பு நிதி திட்டம் (FD – Fixed Deposit). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். இந்த நிலையில், 2026 மார்ச் மாதத்தில் வட்டி விகிதம் மாற்றப்பட்ட நிலையான வைப்பு நிதி திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சூர்யோதாய் சிறு வணிக வங்கி எஃப்டி வட்டி விகிதம்
சூர்யோதாய் சிறு வணிக வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான நிலையான வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. அதாவது பொது குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை அதிகபட்சமாக 7.90 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை அதிகபட்சமாக 8.10 சதவீதமாகவும் மாற்றி அமைத்துள்ளது.
இதையும் படிங்க : PPF, SSY திட்டங்களில் முதலீடு செய்கிறீர்களா?.. மார்ச் 31-க்குள் இதையெல்லாம் செய்யவில்லை என்றால் சிக்கல்!
எச்டிஎஃப்சி வங்கி எஃப்டி வட்டி விகிதம்
எச்டிஎஃப் வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான நிலையான வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. அதாவது பொது குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை அதிகபட்சமாக 6.50 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை அதிகபட்சமாக 7 சதவீதமாகவும் மாற்றி அமைத்துள்ளது.
இதையும் படிங்க : EPS Vs PPF Vs NPS .. மூன்றில் ஓய்வு காலத்திற்கான சிறந்த முதலீடு எது?
யெஸ் வங்கி எஃப்டி வட்டி விகிதம்
யெஸ் வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான நிலையான வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. அதாவது பொது குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை அதிகபட்சமாக7 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை அதிகபட்சமாக 7.75 சதவீதமாகவும் மாற்றி அமைத்துள்ளது.