கேஸ் சிலிண்டர் விலை முதல் ஃபாஸ்டேக் வரை.. பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

February 2026 Changes | ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ஆதார் கார்டு, கேஸ் சிலிண்டர் விலை முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில், பிப்ரவரி 01, 2026 முதல் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர் விலை முதல் ஃபாஸ்டேக் வரை.. பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

31 Jan 2026 23:29 PM

 IST

இன்றுடன் (ஜனவரி 31, 2026) ஜனவரி மாதம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், நாளை (பிப்ரவரி 01,2026) பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல், ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளிட்டவற்றில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில், பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள நிலையில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அப்படி பிப்ரவரி, 2026 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிப்ரவரி, 2026 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்

ஃபாஸ்ட் டேக், கேஸ் சிலிண்டர் விலை, சிகரெட் விலை உள்ளிட்டவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது.

ஃபாஸ்டேக் புதுப்பிப்பு

ஃபாஸ்டேக்குகான (Fastag) கேஒய்சி (KYC – Know Your Customer) சரிபார்ப்பு செயல்முறை முற்றிலுமாக நீக்கம் செய்யப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 01, 2026 முதல் ஃபாஸ்டேக்கை செயல்படுத்திய பிறகு கூடுதல் கேஒய்சி சரிபார்ப்பு தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

இதையும் படிங்க : இந்த ஆண்டு தங்கத்தின் இறக்குமதி சரியும்.. உலக தங்க கவுன்சில் சொன்ன முக்கிய விஷயம்!

கேஸ் சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் விலைகளை மாற்றி அமைக்கும். இதன் காரணமாக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில் பிப்ரவரி 01, 2026 அன்று வீட்டு உபயோக சிலிண்டர் அல்லது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றின் விலையில் மாற்றம் ஏற்படும்.

இதையும் படிங்க : நடுத்தர மக்களுக்கு நிம்மதி அளிக்குமா பட்ஜெட் 2026.. எதிர்பார்ப்புகள் என்ன என்ன?

சிகரெட் மற்றும் புகையிலை விலை அதிகரிப்பு

பிப்ரவரி 01, 2026 முதல் சிகரெட், பான் மசாலா, குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி, கலால் மற்றும் செஸ் உள்ளிட்ட வரிகளை அரசு அதிகரித்துள்ள நிலையில், இந்த பொருட்களுக்கான விலையை அரசு அதிகரிக்க உள்ளது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்