SIP மற்றும் STP.. எந்த திட்டத்தில் எப்போது, எப்படி முதலீடு செய்ய வேண்டும்?
SIP and STP Schemes Investment | தற்போதைய சூழலில் அதிக லாபம் தரக்கூடிய மிகச்சிறந்த திட்டங்களாக உள்ளவை தான் இந்த எஸ்ஐபி மற்றும் எஸ்டிபி. இந்த இரண்டு திட்டங்களில் எப்படி, எப்போது முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்து வருமானத்தை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. இதற்காக பெரும்பாலான பொதுமக்கள் முதலீடும் செய்கின்றனர். ஆனால், அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு ஒன்று உள்ளது. அதுதான் தவறான முதலீடு. தங்களது பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களுத்து பொருத்தமில்லாத ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்வது தான். இந்த நிலையில், சிறந்த பலன்களை தரக்கூடிய மிகச்சிறந்த திட்டங்களான எஸ்ஐபி (SIP – Systematic Investment Fund), எஸ்டிபி (SDP – Systematic Deposit Plan) ஆகியவை உள்ளன. அவற்றில் முறையாக முதலீடு செய்து சிறந்த லாபத்தை பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிறந்த பலன்களை வழங்கும் அசத்தல் திட்டங்கள்
மியூச்சுவல் ஃபண்டில் (Mutual Fun) முதல் முதலாக முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இது சற்று சிரமமானதாகவும், குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் தான் இருக்கும். ஆனால், இந்த இரண்டு திட்டங்களுமே உங்களது நிதி பாதுகாப்பை மேம்படுத்த கூடிய மிகச் சிறந்த திட்டம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். ஆனால், இவை இரண்டிற்கான முதலீடு காலங்கள் வித்தியாசமானதாக இருக்கும். அதன் அடிப்படையில் முதலீடு செய்வது சிறந்த லாபத்தை வழங்கும்.
இதையும் படிங்க : வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கலாம்? அரசின் விதிகள் என்ன?
எஸ்ஐபி முதலீடு
நீங்கள் பணியில் சேந்த ஆரம்ப கட்டத்தில் இருந்த சிறு தொகையாக இருந்தாலும் அதனை எஸ்ஐபியில் முதலீடு செய்யலாம். இது உங்களது வாழ்க்கையில் நிதி ஒழுக்கத்தை உருவாக்க உதவும். இவ்வாறு தொடர்ந்து எந்த வித இடை நிறுத்தலும் இல்லாமல் நீங்கள் முதலீடு செய்து வரும் பட்சத்தில் உங்களிடம் பெரிய கார்பஸ் இருக்கும். இந்த எஸ்ஐபி முதலீட்டை மாத தவணை போல நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து செல்லும்படி நீங்கள் வைத்துக்கொள்ளலாம். மாதத்திற்கு ஒருமுறை காலாண்டிற்கு ஒருமுறை என நீங்கள் முதலீட்டை திட்டமிட்டுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : ஏடிஎம் கார்டு இல்லாமலே UPI பின் செட் செய்யலாம்.. எப்படி தெரியுமா?
எஸ்டிபி முதலீடு
உங்களுக்கு திடீரென போனஸ் அல்லது சொத்து விற்பனை போன்ற பெரிய தொகை ஏதேனும் கையில் கிடைக்கிறது என்றால் அவற்றை மொத்தமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வது மிகவும் ரிஸ்கான ஒன்று. இந்த சூழலில் தான் எஸ்டிபி உங்களுக்கு கை கொடுக்கும். அதாவது எஸ்டிபி மூலம் அந்த தொகையை லிக்விட் ஃபண்டில் (Liquid Fund) வைத்து, அங்கிருந்து பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஈக்விட்டி ஃபண்டிற்கு (Equity Fund) மாற்றலாம். இது சந்தையின் ஏற்ற, இறக்கங்களில் இருந்து உங்கள் பணத்தை பாதுகாக்க உதவும்.