கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!

Sensex Crashes 2500 Points In Share Market | ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஈரான் போர் எதிரொலியாக இன்று ஒரே நாளில் மட்டும் இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 2500 புள்ளிகள் சரிந்துள்ளது.

கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

09 Mar 2026 15:57 PM

 IST

மும்பை, மார்ச் 09 : ஈரான் போர் (Iran War) பதற்றத்துக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தை (India Share Market) இன்று (மார்ச் 09, 2026) கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது, இன்று ஒரே நாளில் மட்டும் சென்செக்ஸ் (Sensex) 2,500 புள்ளிகள் சரிந்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் இன்று ஒரு நாளில் மட்டும் ரூ.13 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளனர். இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போர் பதற்றம் காரணமாக கடும் சிக்கல்களை எதிர்கொள்ளும் பங்குச்சந்தை

பிப்ரவரி 28, 2026 முதலே ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மிக கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஈரானும்  பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. போர் பதற்றத்தின் போது பங்குச்சந்தை கடும் பாதிப்புகளை சந்திக்கும் நிலையில், ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவதற்கு முன்பு இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!

ஒரே நாளில் 2,500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்

இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது. சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் சரிந்து 76,424 புள்ளிகளுக்கும், நிஃப்டி 50 750 புள்ளிகள் சரிவை சந்தித்து 23,697 புள்ளிகளுக்கும் வர்த்தகம் செய்யப்பட்டது. அதாவது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே 3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இவ்வாறு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மிக கடுமையான சரிவை சந்தித்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.13 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.

இதையும் படிங்க : வீட்டில் இருந்தே சுலபமாக ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை சரிந்ததற்கு என்ன காரணம்?

ஈரான் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதாவது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. 2022-க்கு பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் ஒரு பேரல் 117 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 26 சதவீதம் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணியை ஈரான் மூடியுள்ளது கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்துள்ள நிலையில், தற்போது போர் முடியும் சூழல் இல்லாததால் இந்திய பங்குச்சந்தை இத்தகைய கடும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..