ஒருவேளை உணவை மிச்சப்படுத்தியாவது வெள்ளி வாங்குங்கள்.. ராபர்ட் கியோசாகி வழங்கும் முக்கிய அறிவுரை!

Robert Kiyosaki Advice To Silver Investment | வெள்ளி பாதுகாப்பான முதலீடு இல்லை என்றும், அதில் முதலீடு செய்வது சிக்கலை ஏற்படுத்தும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், ரிச் டாட் பூர் டாட் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி வெள்ளியில் முதலீடு செய்ய வலியுறுத்துகிறார்.

ஒருவேளை உணவை மிச்சப்படுத்தியாவது வெள்ளி வாங்குங்கள்.. ராபர்ட் கியோசாகி வழங்கும் முக்கிய அறிவுரை!

ராபர்ட் கியோசாகி

Published: 

10 Mar 2026 15:37 PM

 IST

உலக அளவில் தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) மிக சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. என்னதான் இருந்தாலும் வெள்ளியில் முதலீடு செய்வது, தங்கத்தில் முதலீடு செய்வதை போல பாதுகாப்பானது இல்லை என்று வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப சமீபத்தில் கூட வெள்ளி மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. இந்த சூழலில் பெரும்பாலான பொதுமக்கள் வெள்ளியில் முதலீடு செய்யவே தயங்கும் நிலையில் ரிச் டேட் பூர் டேட் (Rich Dad Poor Dad) புத்தகத்தின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது வெள்ளியில் முதலீடு செய்யுங்கள் என அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

கடும் சரிவை சந்தித்த வெள்ளி

2026 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே வெள்ளி மிக கடுமையான விலை உயர்வை அடைய தொடங்கியது. ஒரு கிராம் வெள்ளி ரூ.425-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.4,25,000 வரையும் விற்பனை செய்யப்பட்டது. இதனை நம்பி பலரும் வெள்ளியில் முதலீடு செய்தனர். ஆனால், ஜனவரி 29, 2026 முதல் வெள்ளி விலை தலைகீழாக மாற தொடங்கியது. அதாவது வெள்ளி படிப்படியாக விலை குறைந்து தற்போது ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு வெள்ளி விலை மிக கடுமையான சரிவை சந்தித்த நிலையில், பலரும் வெள்ளியில் முதலீடு செய்ய தயங்குகின்றனர். இந்த நிலையில் தான், ராபர்ட் கியோசாகி இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க : ஹுருன் இந்திய பணக்காரர்கள் பட்டியல்.. மீண்டும் முதல் இடத்தில் முகேஷ் அம்பானி!

வெள்ளியில் முதலீடு செய்ய அறிவுறுத்தும் ராபர்ட் கியோசாகி

சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராபர்ட் கியோசாகி, உலகமே பெரிய கடனில் சிக்கியுள்ளது. திரும்ப செலுத்த முடியாத கடன் வலையில் இருக்கிறது. எனவே தங்கம், வெள்ளி, பிட்காயின் ஆகியவற்றில் முதலீடு செய்வதை அதிகரித்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். 2026 ஆம் ஆண்டில் 10 டாலர் உங்கள் கையில் இருந்தால் கூட உடனடியாக வெள்ளியை வாங்கி வைத்துவிடுங்கள். ஒருவேளை உணவை மிச்சப்படுத்தியாவது வெள்ளியை வாங்கி வையுங்கள். இது பின்னாளில் உங்களுக்கு பெரிய அளவில் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!

கடந்த ஒரு மாதங்களாக வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.3,25,000-த்தை தாண்டாமல் உள்ள நிலையில், ராபர்ட் கியோசாகியின் இந்த அறிவுரை பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..