ரியல் எஸ்டேட் Vs தங்கம்.. இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது?

Real Estate vs Gold Investment | பொருளாதாரத்தை வலுப்படுத்த பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமால உள்ளவை ரியல் எஸ்டேட் மற்றும் தங்க முதலீடு தான். இந்த நிலையில், அவை இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

ரியல் எஸ்டேட் Vs தங்கம்.. இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது?

மாதிரி புகைப்படம்

Updated On: 

14 Nov 2025 20:57 PM

 IST

மண்ணிலும், பொன்னிலும் போடும் பணம் எப்போதுமே வீணாகாது என்ற கருத்து உள்ளது. அதாவது ரியல் எஸ்டேட் (Real Estate) மற்றும் தங்கத்தில் முதலீடு (Gold Investment) செய்வது எப்போது அதிக லாபத்தை பெற கூடிய வழியாக இருக்கும் என்பது தான் அது. அதற்கு ஏற்ப தற்போது வரை ரியல் எஸ்டேட் முதலீடுகளும், தங்க முதலீடுகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. ஆனால், பெரும்பாலான நபர்களுக்கு தங்கத்தில் முதலீடு செய்வதா அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது சிறந்ததா என்ற குழப்பம் உள்ளது. இந்த நிலையில், இவை இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரியல் எஸ்டேட் Vs தங்க முதலீடு

ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் இவை இரண்டுமே சிறந்த முதலீடுகளாக உள்ளன. இந்த நிலையில், இவை இரண்டில் இருக்கும் சாதக பாதகங்கள் குறித்து பார்க்கலாம்.

ரியல் எஸ்டேட் முதலீடு

காலம் காலமாக சிறந்த லாபத்தை கொடுத்த முதலீடு ரியல் எஸ்டேட் என்றால் அது மிகை ஆகாது. சில ஆண்டுகளுக்கு முன்பு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தவர்கள் தற்போது பொருளாதாரத்தில் மிகப்பெரிய இடங்களில் உள்ளனர். அந்த அளவுக்கு ரியல் எஸ்டேட் லாபகரமான முதலீடாக உள்ளது. ஆனால், ரியல் எஸ்டேட் அனைவருக்குமான ஒரு முதலீடா என்றால் அதுதான் இல்லை.

இதையும் படிங்க : 8.2% வரை வட்டி வழங்கும் அசத்தல் முதலீட்டு திட்டங்கள்.. என்ன என்ன?

காரணம் என்னிடம் கோடிகளில் பணம் உள்ளது. அந்த பணம் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு எனக்கு தேவைப்படாது என நினைக்கும் தாராளமாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம். ஆனால், குறைந்த அளவு பணம் உள்ளது, அடுத்த சில ஆண்டுகளிலேயே அந்த பணத்திற்கான தேவை உள்ளது என்றால் உங்களுக்கு ரியல் எஸ்டேட் சிறந்த தேர்வாக இருக்காது.

தங்க முதலீடு

என்னிடம் குறைவான அளவு பணம் உள்ளது, அதை நான் முதலீடு செய்ய விரும்புகிறேன். எனக்கு தேவைப்படும்போது அந்த முதலீட்டை வைத்து பணம் பெற விரும்புகிறேன் என நீங்கள் நினைத்தால் அதற்கு தங்கம் தான் சிறந்த முதலீடு. காரணம், தங்கத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அடகு வைத்தோ அல்லது விற்பனை செய்தோ பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே நீங்கள் உங்கள் பண இருப்பு மற்றும் தேவையை மையப்படுத்தி முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.