RBI : ஆண்டின் இறுதியில் இரண்டுமுறை ரெப்போ வட்டியை குறைக்க உள்ள ஆர்பிஐ!
RBI Repo Rate Cut 2025 | 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மூன்றாவது முறையாக குறைத்தது. இந்த நிலையில் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் மூன்று முறை ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை குறைத்துள்ள நிலையில், ஆண்டின் இறுதியில் மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி எப்போது ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க உள்ளது, எவ்வளவு வட்டி விகிதத்தை குறைக்க உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025 இறுதியில் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் ஆர்பிஐ
கடந்த ஐந்து ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படாமலே இருந்து வந்தது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்து வருகிறது. அதாவது பிப்ரவரி மாதத்தில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதன் மூலம் 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இதையும் படிங்க : Pre Approval முதல் Easy EMI வரை.. பண்டிகை காலத்துக்கு லோன் வழங்கும் பஜாஜ் ஃபைனான்ஸ்!
அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் ரெப்போ வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூன் மாதத்தில் மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. ஜூனில் 50 அடிப்படை புள்ளிகள் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது ரெப்போ வட்டி விகிதம் வெறும் 5 சதவீதமாக உள்ளது.
அடோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ரெப்போ வட்டியை குறைக்கும் ஆரிபிஐ?
2025 ஆம் ஆண்டு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், விரைவில் 2026 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. 2026 ஆம் ஆண்டு இந்தியாவின் பணவீக்கம் 2.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழல் உருவாகும் பட்சத்தி ஆர்பிஐ ரெப்போ வட்டியை குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தலா 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ITR Filing : வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆர்பிஐ ரெப்போ வட்டியை குறைக்கும் பட்சத்தில் அது வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.