ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு, கார், பைக் லோனுக்கு EMI குறைகிறது..
Repo Rate Cut: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு 2025ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 3 முறை ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 1 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி (Repo Rate) விகிதம் 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) அறிவித்துள்ளது. 0.25 சதவீதம் குறைக்கப்பட்டதை அடுத்து ரெப்போ வட்டி வகிதம் வட்டி விகிதம் 5.50 சதவீதத்தில் இருந்து, 5.25 சதவீதமாக குறைந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து, வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய உள்ளது. அதன் மூலம் மாதாந்திர தவணை (EMI) குறைய உள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் அடிப்படையில், இன்று (டிசம்பர் 05) இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி விகித குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Provident Fund : அதிரடியாக உயரப்போகும் பிஎஃப் வட்டி.. வெளியான முக்கிய தகவல்!
அக்டோபரில் குறையாத ரெப்போ வட்டி:
உலகளாவிய மந்தநிலையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ ஆகஸ்ட் மற்றும் அக்டோபரில் மாதங்களில் வட்டி விகித்தை குறைக்காத நிலையில், டிசம்பர் மாதம் கூட்டத்தில் வட்டியை குறைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் மிகக்குறைந்த அளவை எட்டியது. இதற்கிடையே, ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.
இந்த சூழலில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்குமா அல்லது தற்போதைய நிலையைத் தக்கவைக்குமா என்பது பெரும் கேள்வியாக இருந்தது. இதுகுறித்து எஸ்பிஐ (SBI) மேற்கொண்ட ஆலோசனை அறிக்கையின்படி, ரிசர்வ் வங்கி இந்த முறை வட்டியை குறைக்க வாய்ப்பில்லை என்றே தெரிவித்திருந்தது. இதனால், வீட்டுக்கடன் இஎம்ஐ–ல் (EMI) பெரும் மாற்றம் இருக்காது என்றும் கூறப்பட்டது.
இதையும் படிங்க : Credit Card : கிரெடிட் கார்டு மோசடி நடைபெற்றால் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷ்யங்கள் இதுதான்!
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு:
இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் அடிப்படையில், இன்று (டிசம்பர் 05) இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம், ரெப்போ வட்டி வகிதம் வட்டி விகிதம் 5.50 சதவீதத்தில் இருந்து, 5.25 சதவீதமாக குறைந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைந்ததை தொடர்ந்து, வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விரைவில் குறைய உள்ளது.
ஒரே ஆண்டில் 4வது முறையாக ரெப்போ வட்டி குறைப்பு:
நடப்பு 2025ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 3 முறை ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 1 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.50 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், 4வது முறையாக தற்போது ரெப்போ வட்டி மேலும் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிப்ரவரி மாதம் முதல் இதுவரை மொத்தமாக 125 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.