மாறாத ரெப்போ வட்டி விகிதம் – ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு நன்மையா?

Repo Rate Update: இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழுவின் மீட்டிங் நடைபெற்ற நிலையில் ரெப்போ வட்டி விகிதம் மாறாமல் தொடர்வதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இது ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

மாறாத ரெப்போ வட்டி விகிதம் - ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு நன்மையா?

மாதிரி புகைப்படம்

Published: 

08 Apr 2026 18:53 PM

 IST

இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழுவின் மீட்டிங் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ஏப்ரல் 8, 2026 அன்று நடைபெற்றது.  அப்போது ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது ரெப்போ விகிதம் 5.25 சதவீதமாகவே தொடர்கிறது. இந்த முடிவு, வீட்டு கடன் பெற்றவர்கள் மற்றும் புதிய வீடு வாங்க நினைப்பவர்களுக்கு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு நன்மையா?

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால், தற்போது வீட்டுக் கடன்கள் பெற்றவர்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய மாதத் தவணை தொகை மாற்றமின்றி தொடரும். இதனால் அவர்களுக்கு மாத பட்ஜெட்டில் சுமை அதிகரிக்காது.  இது அவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் முடிவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : ஹேப்பி நியூஸ்! புதிய வருமான வரி சட்டம் 2025 – வீடு வாங்கும் திறனை அதிகரிக்குமா?

கடந்த 2025 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது. மொத்தமாக 125 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டதால் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு பெரிய அளவில் நன்மை பெற்றுள்ளனர்.  உதாரணமாக 20 ஆண்டுகளுக்கு ரூ. 50 லட்சம் வரை கடன் பெற்றிருந்தவர்கள் மாதம் ரூ. 3000 முதல் 4,000 வரை தவணையில் குறைந்தது. இதனால் மொத்த வட்டியில் கணக்கிடும் போது லட்சக்கணக்கில் சேமிக்கும் வாய்ப்பு கிடைத்து.

தற்போதைய நிலையின் படி, இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் ஏற்கனவே குறைத்த வட்டி விகிதத்தனின் பலனை மக்களுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க : வீட்டுக்கடனுக்கு வட்டியை தவிர்க்க வேண்டுமா? கைகொடுக்கும் SIP முதலீடு – எப்படி தெரியுமா?

குறிப்பாக புதிய வீடு வாங்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. தற்போது வீட்டுக் கடன் வட்டி விகிதம் 7.25 சதவிகிதம் முதல் 7.5 சதவிகிதம் வரை இருக்கிறது. இது கடந்த ஆண்டுகளை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் கடன் வாங்கியவர்கள் தங்களின் கடன் விதிமுறைகளை பரிசீலனை செய்து குறைந்த வட்டி விகிதத்திற்கு மாறுவது ல்லது முன்கூட்டியே கடனை அடைக்க முயற்சிப்பது போன்ற முறைகளை பயன்படுத்தலாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மொத்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு கடன் வாங்கியவர்களுக்கு நிலையான வழிமுறைகளை வழங்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் பண வீக்கம், உலக பொருளாதார மந்த நிலை ஆகியவற்றை பொறுத்து வட்டி விகித்தில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?