கிரெடிட் கார்டு பயனர்களுக்கு அதிர்ச்சி.. இனி இந்த தேவைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியாது.. ஆர்பிஐ முக்கிய உத்தரவு!
RBI New Rules for Credit Card | இந்தியாவில் ஏராளமான பொதுமக்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், இனி கிரெடிட் கார்டு பயன்படுத்தி வீட்டு வாடகை செலுத்த முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்காக கிரெடிட் கார்டு (Credit Card) பயன்படுத்துகின்றனர். குறைவான மாத சம்பளம் வாங்கும் பொதுமக்களுக்கு கிரெடிட் கார்டு மிகவும் பயனுள்ள அம்சமாக உள்ளது. இந்த நிலையில், இனி கிரெடிட் கார்டு பயன்படுத்தி வீட்டு வாடகை கட்டணத்தை செலுத்த முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) தெரிவித்துள்ளது. யுபிஐ (UPI – Unified Payment Interface) பரிவர்த்தனையில் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆர்பிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், கிரெடிட் கார்டில் ஆர்பிஐ விதித்துள்ள இந்த புதிய தடை குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு
இந்தியாவை பொருத்தவரை ஏராளமான பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். குறைவான மாத சம்பளம் வாங்கும் பலரும் தங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதி தேவைகளுக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் பணத்தை மாத தவணை மூலம் திருப்பி செலுத்த 45 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் நிலையில், சாமானிய மக்களுக்கு இது மிகவும் பயனுள்ள அம்சமாக உள்ளது. இந்த நிலையில் தான் சாமானிய மக்களின் தலையில் இடியை இறக்கும் வகையில் ஆர்பிஐ ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : EPFO : இபிஎஃப்ஓவில் வந்த புதிய விதி.. இனி PF Transfer சுலபமாகிவிடும்.. எப்படி தெரியுமா?
கிரெடிட் கார்டு மூலம் இனி வீட்டு வாடகை செலுத்த முடியாது
பெரும்பாலான பொதுமக்கள் கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தி வந்தனர். காரணம், கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும் நபர்களுக்கு ரிவார்டு புள்ளிகள், கேஷ்பேக் மற்றும் வட்டி இல்லாத கடன் ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பின் மூலம் இனி அந்த சலுகைகள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. செப்டம்பர் 15, 2025 அன்று கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்த முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி சுற்றரிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து ஃபின்டெக் நிறுவனம் கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும் சேவையை நிறுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் எதிரொலி.. பால் முதல் ஐஸ் கிரீம் வரை 700 பொருட்களின் விலையை அதிரடியாக குறைத்த அமுல்!
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிரெடிட் கார்டில் வாடகை செலுத்துவதற்கான சேவையை நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.