Post Office Scheme: குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ரூ.15 லட்சம் சேமிக்கலாம் – இதை டிரை பண்ணுங்க

Post Office Scheme : தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பை வழங்குகின்றன. அரசு ஆதரவு பெற்ற திட்டம் என்பதால் பாதுகாப்புடன், நம் முதலீடு செய்யும் தொகைக்கு வரிவிலக்கும் கிடைக்கும் என்பது இதில்கூடுதல் சிறப்பு. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

Post Office Scheme: குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ரூ.15 லட்சம் சேமிக்கலாம் - இதை டிரை பண்ணுங்க

மாதிரி புகைப்படம்

Published: 

29 Aug 2025 16:25 PM

இந்தியாவில் பாதுகாப்பான  சேமிப்பு திட்டமாக (Post office) தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பதன் மூலம் அது நீண்ட காலத்துக்கு பாதுகாப்பை வழங்குகின்றன.  ஒரு சிறந்த தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் குழந்தைகளின் (Children) எதிர்காலத்திற்கு ரூ. 15 லட்சம் நிதியை உருவாக்கலாம். இந்த தொகைய எதிர்காலத்தில் அவர்களின் கல்வி செலவுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும். மேலும் இது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், இதற்கு வரி விலக்கும் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு. மேலும் நாம் முதலீடு செய்யும் தொகைக்கு ஆண்டு வட்டியும் கிடைக்கும்.

வருங்கால வைப்பு நிதி

நீண்ட கால முதலீட்டிற்கு நம்பகமான தேர்வாக வருங்கால வைப்பு நிதி திட்டம் விளங்குகிறது. இது பாதுகாப்பானது மட்டுமல்ல, நல்ல வருமானத்தையும் தருகிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தது ரூ500 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மொத்தம் 15 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் இறுதியில் உங்களுக்கு பெரிய தொகை கிடைக்கும். இது குழந்தைகளின் உயர்கல்வி போன்ற தேவைகளுக்கு மிகவும் உதவிகரமானதாக இறுக்கும. தற்போது இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரிவிலக்கும் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

இதையும் படிக்க : ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?

இந்த திட்டத்தில் மாதம் ரூ.2,100 முதலீடு செய்கிறீர்கள் என வைத்ததுக்கொண்டால், வருடத்தில் ரூ.25,200 முதலீடு செய்வீர்கள். இந்த முதலீடை தொடர்ந்து செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த வைப்பு தொகை ரூ. 3.75 லட்சமாக இருக்கும். அதனுடன் ஆண்டு வட்டி 7.1 சதவிகிதத்தை கணக்கிட்டால், கடைசியாக உங்களுக்கு மொத்தமாக 6.78 லட்சம் கிடைக்கும். இதனை உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர்கிற காலத்தில் பெரும் உதவியாக இருக்கும்.

ஆபத்து குறைவு

வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது அரசால் நடத்தப்படும் ஒரு திட்டமாகும். எனவே இதில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது. ஒரு வங்கியைப் போல சந்தையின் ஏற்ற இறங்களால் உங்கள் முதலீடுகள் பாதிக்கப்படாது. இதில் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை இரண்டும் வருமான வரியில் இருந்து முற்றிலும் விலக்கு கிடைக்கும். இது சேமிப்புக்கும் நபருக்கு இரட்டை நன்மை போன்றது. ஒருபுறம் வழக்கமான சேமிப்பில் இருந்து ஒரு பெரிய நிதி உருவாகிறது. மறுபுறம் வரிச் சலுகையும் கிடைக்கிறது.

இதையும் படிக்க : குறைந்த கால அளவீடு கொண்ட எஃப்டி.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

இந்தத் திட்டம் ஏன் சிறந்த வழி?

உங்கள் குழந்தை பிறந்தவுடன் முதலீடு செய்யத்  தொடங்கினால், சரியாக 15 ஆண்களில், அவர்கள் கல்லூரி செல்லும் நாட்களில் பணம் உங்கள் கைகளில் கிடைக்கும். அதனை வைத்து கல்லூரி கட்டணத்தை செலுத்தமுடியும். மேலும் இந்த திட்டத்தில் நிலையான வட்டி கிடைக்கும். முதலீடு மிகவும் பாதுகபாப்பானது. இதற்கு வரி விலக்கும் கிடைக்கும். சிறிய தொகையை முதலீடு செய்தவன் மூலம் பெரிய லாபம் கிடைக்கும்.